2ஆவது திருமணத்திற்கு முயற்சி செய்யலாம்; தான தர்மங்கள் செய்ய வேண்டும்!

35

2ஆவது திருமணத்திற்கு முயற்சி செய்யலாம்; தான தர்மங்கள் செய்ய வேண்டும்!

ஆகஸ்ட் 02 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (02-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: கருடன் வழிபாடு செய்ய பிரச்சனைகள் தீரும். வேலைவாய்ப்பு கிடைக்கும். போட்டி பந்தயங்களை சமாளிக்க கூடிய நாள். குடும்ப உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும்.

ரிஷபம்: பூர்வ புண்ணிய அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். குடும்ப உறவுகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.

மிதுனம்: மன தைரியம் அதிகரிக்கும். அஷ்டமத்து சனி ஆட்டி வைக்கும். நேர்மறையாக பேச வேண்டும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்ய வேண்டும். தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். பண விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை.

கடகம்: அருமையான நாள். நல்ல நல்ல வாய்ப்புகள் குவியும். சிறுதூர பயணங்கள் வெற்றி தரும். முயற்சிகள் அனுகூலமாக முடியும். அக்கம் பக்கத்தாரின் ஆதரவு கிடைக்கும். வருமானம் உயரும். குடும்ப கௌரவம் உயரும்.

சிம்மம்: மிக முக்கியமான காலகட்டம். எந்த முடிவையும் தெளிவாக எடுக்க வேண்டும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். அலுவலக தொந்தரவு குறையும். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும்.

கன்னி: சிலம்ப கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும். மிகப்பெரிய நன்மைகளை தரும். நெருக்கடிகள் விலகும். தியானம் செய்ய வேண்டும். மிகச்சிறந்த வெற்றிகள் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்பு முயற்சிகள் வெற்றி பெறும். இடமாற்றம் உண்டாகும். பணப்புழக்கம் கூடும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: மிக நல்ல நாள். வேலைமாற்றம் உண்டாகும். தாய் வழி உறவுகளில் இழப்புகள் ஏற்படலாம். கணவன் மனைவி உறவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். உங்களது உடல் நலனில் அதிக அக்கறை தேவை. முதலீடு செய்யும் போது யோசித்து செயலாற்ற வேண்டும்.

விருச்சிகம்: அருமையான நாள். தொட்ட காரியங்கள் துலங்கும். 2ஆவது திருமணத்திற்கு முயற்சி செய்யலாம். கணவன் மனைவி உறவில் பிரச்சனை இருக்கும். குடும்ப உறவுகள் ரொம்பவும் முக்கியம். எண்ணிய காரியங்கள் வெற்றி பெறும். வியாபாரம் நன்றாக இருக்கும்.

தனுசு: தொட்டது துலங்கும் அற்புதமான நாள். வேலைக்கு முயற்சித்தால் நல்ல வேலை கிடைக்கும். தான தர்மங்கள் செய்ய வேண்டும். நிறைய வெற்றிகள் உண்டு. முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும். வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். அருமையான நாள்.

மகரம்: ஏராளமான நன்மைகள் நடக்கும் மகிழ்ச்சிகுரிய நாள். 2ஆவது திருமணத்திற்கு முயற்சி செய்யலாம். மனக் குமுறலுக்கு நல்ல மருந்து கிடைக்கும். வியாபாரத்தில் அதிக முதலீடு கூடாது.

கும்பம்: ஏராளமான நன்மைகள் உண்டு. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. பெண்களுக்கு ஆகச்சிறந்த நாள்.

மீனம்: மிகுந்த யோகமான நாள். கணவன் மனைவி உறவில் ரம்மியம் பெருகும். நெருக்கமானவர்களை சந்திப்பீர்கள். சிலரோடு நெருக்கமாக இருப்பீர்கள். மனமகிழ்ச்சியான நேரம் இது. கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.