2ஆவது திருமணம் சிறப்பாக நடக்கும்: சிம்மம் ஆவணி மாத ராசி பலன்!

85

2ஆவது திருமணம் சிறப்பாக நடக்கும்: சிம்மம் ஆவணி மாத ராசி பலன்!

ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் சிம்மம் ராசி ஆவணி மாத ராசி பலன்…

சிறப்பான ஒரு மாதம். தன்னம்பிக்கையோடு காணப்படுவீர்கள். எதிர்பார்க்கும் இடத்திலிருந்து பணம் வந்து சேரும். எதிர்காலத்திற்கு முக்கிய திட்டங்களை தீட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். சகோதர, சகோதரிகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிரபலங்களின் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும்.

வியாபாரம், சொந்த தொழில் ஆகியவற்றில் முன்னேற்றம் உண்டாகும். கோபத்தைக் குறைத்துக் கொண்டால், உங்களை வெற்றி பெற யாராலும் முடியாது. பொக்கிஷங்கள் அமைந்த மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது.

மேலும் படிக்க: ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் ரிஷப ராசிக்கான ஆவணி மாத ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

சமூகத்தில் பொறுப்பு, அந்தஸ்து உயரும். மதிப்பும், மரியாதை கிடைக்கும். பணம் பல வகைகளிலிருந்து வந்து சேரும் ஒரு அற்புதமான மாதம். நினைத்ததைவிட நினைக்காததைக் கூட சாதிக்கும் நாள். அனைத்து துறைகளைச் சேர்ந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலை கிடைக்கும்.

தொட்டதெல்லாம் துலங்கும் நாள். பெண்களால் லாபம் உண்டாகும். அனைவருக்கும் வேலை கிடைத்து, கை நிறைய சம்பாதித்து சந்தோஷமாக வாழும் ஒரு நல்ல மாதம். வெளிநாட்டிலிருந்து ஒரு நல்ல தகவல் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். இளைய சகோதரத்தால் ஆதரவு பெருகும்.

வீடு இல்லாதவர்கள் வீடு வாங்கும் சூழல், வீடு கட்டக் கூடிய ஒரு சூழல் அமையலாம். அசையா சொத்துக்கள் வைத்திருப்பவர்களுக்கு லாபம் பெருகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். படித்து முடித்து வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் நடைபெறும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒரு மாதம். கணவன் – மனைவி பரஸ்பர ஒற்றுமை, சந்தோஷம், குதூகலம் நிச்சயமாக இருக்கிறது. நண்பர்களுக்கு ஓடிச் சென்று உதவி செய்வீர்கள். புதிய நபர்களிடம் எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. இல்லையென்றால், கௌரவ பங்கம், அசிங்கம், அவமானம் என்று ஒரு சிலருக்கு ஏற்பட வாய்ப்புண்டு.

குல தெய்வ வழிபாடு செய்யுங்கள். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும். ரிஷிகள், முனிவர்கள், குருமார்களின் ஆசி கிடைக்கும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு உண்டு. மேலதிகாரி, சக ஊழியர்களின் பேச்சைக் கேட்டு நடப்பது அவசியம். இறக்குமதி, ஏற்றுமதி, பங்குச்சந்தை வர்த்தகம், உள்நாட்டு வர்த்தகம், வெளிநாட்டு வர்த்தகம் என்று இருப்பவர்களுக்கு ஒரு நல்ல லாபம் கிடைக்கும் நிலை உண்டாகும்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் கடனுதவி பெற்று தொழிலில் முதலீடு செய்தால், தொழில் விருத்தியடையும். தொட்டதும் துலங்கும், தொடாததும் துலங்கும். முதலில் திருமணத்தில் முறிவு ஏற்பட்ட 2ஆவது திருமணத்திற்கு காத்திருக்கும் அன்பர்களுக்கு கூட நல்லது நடக்கும் ஒரு அற்புதமான மாதம். மூத்த சகோதரர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.