2022 ஆம் ஆண்டு புத்தாண்டு மிதுன ராசிக்கு எப்படி? கஷ்டத்துக்கு பலன் கிடைக்குமா?

197

2022 ஆம் ஆண்டு புத்தாண்டு மிதுன ராசிக்கு எப்படி? கஷ்டத்துக்கு பலன் கிடைக்குமா?

பல சோதனைகளை தாண்டி ஒரு வழியாக இந்த 2021 ஆம் ஆண்டு முடியப் போகிறது. ஒவ்வொருவரும் நிம்மதி பெருமூச்சு விடக் கூடிய 2022 ஆம் ஆண்டு புத்தாண்டும் வரப்போகிறது. பிறக்கப் போகும் 2022 ஆம் ஆண்டு நல்ல வேலை வாய்ப்பை கொடுக்குமா? திருமண வரன் அமையுமா? குழந்தை பாக்கியம் கிடைக்குமா? சொத்து, சுகம் சேருமா? என்பது குறித்து ஒவ்வொரு ராசியினருக்கும் தனித்தனியாக பார்ப்போம். ஜோதிஷ கஜகேசரி டாக்டர் ஆச்சார்யா ஹரீஷ் ராமன் 12 ராசிகளுக்கான 2022 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு ராசி பலன்களை தொகுத்து வழங்கியுள்ளார். அந்த வகையில் மிதுன ராசிக்கான 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு ராசி பலனை இந்தப் பதிவில் பார்ப்போம்.

மேலும் படிக்க: மிதுன ராசிக்கான 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

ராகு, கேது, குரு மற்றும் சனி பகவான் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் சஞ்சாரம் ஆகியவற்றை வைத்து மிதுனம் ராசிக்கான பலன்கள் கணித்து சொல்லப்பட்டுள்ளது. இந்த கிரகங்களின் சேர்க்கை காரணமாக இந்த ஆண்டு உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த ராசிக்காரர்கள் இதையெல்லாம் பார்த்திருப்பீர்கள்.

அவமானம், ருணம் (கடன் படுவது), குடும்பத்தில் யாரேனும் ஒருவரது உடல் நிலை பாதிப்பு அல்லது இறப்பு, கால் பிரச்சனை என்று இந்த 4 சம்பவங்களும் மிதுன ராசிக்காரர்களுக்கு நடந்திருக்கும். இந்த கஷ்டங்களை எல்லாம் முறியடிக்கும் வகையில் ராகு, கேது, குரு மற்றும் சனி பகவானின் பெயர்ச்சி அமையப் போகிறது. வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி ராகு, கேது பெயர்ச்சி நடக்கிறது. இந்த பெயர்ச்சி மிகவும் திருப்திகரமாக அமையப் போகிறது. https://www.youtube.com/watch?v=UirPW840CAg

ஏனென்றால், ராகு உங்களுக்கு 11 ஆது இடத்திலும், கேது 5ஆவது இடத்திலும் சஞ்சரிக்கப் போகிறது. மஹான்களின் தரிசனம், காதல் கைகூடுவது, நிச்சயதார்த்தம் நடப்பது, திருமணம் நடப்பது, நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும், கடன் பிரச்சனை தீருவது, குழந்தைகளின் மகிழ்ச்சி, குழந்தை பிறப்பு, பெண் குழந்தை பிறப்பு, 2ஆவது திருமணம் செய்வது இந்த மாதிரி எல்லா விஷயங்களிலும் நல்லது நடக்கும்.

ராகு உங்களுக்கு 11அவது இடத்திற்கு வருகிறார் என்றால், 3, 7 மற்றும் 11க்குடைய பாவங்கள் ஆக்டிவேட் ஆகும். இதனால், இடமாற்றம் ஏற்படும். எந்த வேலையிலும் இருந்தால் சரி, பதவி உயர்வு தேடி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நட்பு உண்டாகும். பொருளாதார உயர்வு ஏற்படும். சுப செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டு. https://www.youtube.com/watch?v=UirPW840CAg

ஏற்றுமதி தொடர்பான வியாபாரம் செய்யலாம். வெளிநாடு தொடர்பான அனைத்து விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். தொழில் ரீதியாக எந்த கஷ்டமும் உங்களுக்கு ஏற்படாது. ராகு, கேது பெயர்ச்சி காரணமாக ஏராளமான நன்மைகள் நடைபெறும். இதுவரையில் சனி பகவான் 8ஆவது இடத்திலிருந்து சொல்ல முடியாத கஷ்டங்களை எல்லாம் கொடுத்திருக்கும். https://www.youtube.com/watch?v=UirPW840CAg

வரப்போகும் சனி பெயர்ச்சியானது ஒரு 55 நாட்களுக்கு உங்களுக்கு நன்மையளிக்கும். முன்னோர்கள் தொடர்பான பிரச்சனைகள், சொத்து பிரச்சனைகள், வரப்பு பஞ்சாயத்து தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் ஏப்ரல் முதல் ஜூலைக்குள்ளாக எல்லாமே முடியப் போகிறது. எல்லா சொத்துக்களும் வந்து சேரும். குழந்தைகள் வெளிநாடு சென்று வருவார்கள்.

உங்களுக்கும் வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்புகள் வரும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். மியூசியம் சென்று வருவீர்கள். ஜாலி டிராவல் நிறைய இருக்கும். பழமையான கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு வருவீர்கள். கீழடிக்கு சென்று வருவீர்கள். யோகமான காலகட்டம் மிதுன ராசிக்காரர்களுக்கு அமையப் போகிறது. https://www.youtube.com/watch?v=UirPW840CAg

குரு பகவான் 9ஆவது ஸ்தானத்திலிருந்து 10ஆவது ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகும் போது வேலை மாற்றம் உண்டாகும். ஒரு சிலருக்கு மாற்று வேலை உண்டாகும். ஆதலால் நீங்களே பார்த்துக் கொண்டிருந்த வேலையை விடுவீர்கள். பதவி உயர்வு தேடி வரும். வீட்டில் மதிப்பும், மரியாதையும் உண்டாகும். சந்தோஷத்தின் உச்சகட்டத்தில் இருப்பீர்கள். திருநள்ளாறு சென்று வருவது உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக அமையும். நிறைய பிரச்சனைகளிலிருந்து விடுபடக் கூடிய ஒரு அம்சத்தை திருநள்ளாறு சனீஸ்வர பகவான் உங்களுக்கு அருள்வார்.