8 ஏழைகளுக்கு தண்ணீர் தானம் செய்ய வேண்டும்!

61

8 ஏழைகளுக்கு தண்ணீர் தானம் செய்ய வேண்டும்!

ஆகஸ்ட் 11 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (11-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: வேலை பார்க்கும் இடங்களில் பொறுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு மற்றொருவருக்கு கிடைக்கும். மன சஞ்சலம் உண்டாகும். வீட்டை பராமரிப்பது, வீட்டை அழகுபடுத்துவது என்று இந்த நாள் அமையும்.

ரிஷபம்: கைகளில் அடிபடும் சூழல் உண்டு. சிலருக்கு வாய்வு தொந்தரவு ஏற்படலாம். உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஆனந்தமான ஒரு நாள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். கல்வி தடைகள் விலகும்.

மிதுனம்: காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவற்றிலும் நன்மை. பேச்சில் இனிமை உண்டாகும். தாயாரது உடல் நலம் பற்றி கவலை இருக்கும். வேலை இடமாற்றம் குறித்து கவலை உண்டாகும். 8 ஏழைகளுக்கு தண்ணீர் தானம் செய்ய வேண்டும். வியாபாரம் நன்றாக இருக்கும்.

கடகம்: இனிய நாள். யாரை சந்திக்க விரும்புவீர்களோ அவர்களை சந்திப்பீர்கள். பல பிரச்சனைகளுக்கு நீங்களே முடிவு காண்பீர்கள். பேச்சில் நளினம் இருக்கும். பெண் தெய்வ வழிபாடு வெற்றி தரும். வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும் ஒரு காலம்.

சிம்மம்: உடல் நலனில் அக்கறை தேவை. மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கந்து வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று நல்லெண்ணெய் வாங்கி கொடுக்க வேண்டும். பெண்களுக்கு இடமாற்றம் குறித்து எண்ணம் மேலோங்கும்.

கன்னி: காதல் விவகாரங்களில் முடிவு எடுப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொழுதுபோக்கு விசயங்களில் ஈடுபடும் போது கவனமாக இருக்க வேண்டும். தவறான விசயங்களில் ஈடுபடக் கூடாது. நகங்களில் பிரச்சனை வரலாம். பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனை வரும். ஆண்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: ஈறுகள் தொடர்பான பிரச்சனை ஏற்படலாம். பேச்சினால் பிரச்சனை உண்டாகும். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. புதிய படிப்புகளின் அறிமுகம் கிடைக்கும். பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம்: ரொம்ப நல்ல நாள். வேலை வாய்ப்பு தொடர்பான முயற்சிகள் பலிதமாகும். பணியாளர்களின் குடும்பத்தினரின் மீது அக்கறை காட்ட வேண்டும். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அரசு தொடர்பான விசயங்கள் வந்து சேரும். உடல் நலனில் மட்டும் அக்கறை காட்ட வேண்டும்.

தனுசு: அலுவலக சூழல் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சில வாக்கு வாதங்கள் உண்டு. குடும்ப வாழ்க்கையில் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். பொறுமையாக பேச வேண்டும். வீடு கட்டும் முயற்சி வெற்றி பெறும். குல தெய்வ வழிபாடு வெற்றி தரும். பூர்வீக சொத்துக்கள் வரக்கூடிய யோகம் சிலருக்கு உண்டு. இணையதளங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மகரம்: ஏதோ ஒரு மன அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும். இதற்கு புனர்ப்பு தோஷம் என்று பெயர். திருமண பொருத்தம் பார்ப்பதில் கவனம் தேவை. மீன்களுக்கு உணவளிக்க வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பிஸினஸில் சிலர் ஏமாற்றக் கூடும்.

கும்பம்: மிக நல்ல நாள். வேலை மாற்றம் கிடைக்கும். உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. தன வரவு பெருகும். அசட்டு தைரியம் அதிகரிக்கும். ரத்த தானம் செய்ய வேண்டும்.

மீனம்: அருமையான நாள். பிஸினஸில் லாபம் உண்டு. தேவையான கடனுதவி கிடைக்கும். வண்டி, வாகனங்களில் கவனம் தேவை கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பெண்களுக்கு வாகனம் ஓட்ட கற்றுக் கொள்ளும் யோகம் உண்டு.