வேண்டியதை எல்லாம் கொடுக்கும் குட்டி சாத்தானை தெய்வம் என்பீர்களா?அமானுஷ்யத்தை உணர விரும்புவர்கள் மட்டும் படிக்கவும்:

0 3,910

ஆன்மீகமும் மாந்திரீகமும் ஒட்டி பிறந்த ரெட்டைகள். மாந்திரீகத்திற்க்கு பிரசித்தி பெற்றது கேரள மாநிலம். அதற்க்கு சான்று, திருச்சூர் கானாடிக்காவு குட்டி சாத்தான் கோவில் தான்.

இங்கே குட்டி சாத்தானை சிவனின் மகன் என்கின்றனர். குட்டி சாத்தானை வசியம் செய்து நினைத்த காரியங்களை முடித்துள்ளனராம் நம் முன்னோர்கள்.

அமானுஷ்ய பயணம் : (மாந்தரீகத்தைத் தேடி ஒரு விஷப் பரீட்சை)

அமானுஷ்ய அனுபவங்களுக்கான பயணங்களில் சில சமயம் நம்மை பயம் ஆட்கொள்ளத்தான் செய்கிறது.

குட்டி சாத்தானை வசியம் செய்ய முடியுமா ? முடியும் என்கிறார் இந்த மாந்திரீக குருஜி ;

குட்டி சாத்தான் வசிய மந்திரம் மிகவும் இரகசியமாக இதுவரை பாதுகாக்கப்பட்டுள்ளது. பல மாந்திரீகர்கள் இதை இன்றும் பயன் படுத்துகின்றார்கலாம்.

பலரும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்டு வந்த அரிய மந்திரமான குட்டி சாத்தான் வசிய மந்திரத்தையும் வழிமுறைகளையும் வெளியிடுகின்றேன்.

வெள்ளிக்கிழமை இரவு மூன்று மணிக்கு எழுந்து குளம் அல்லது நதியில் ஸ்நானம் செய்து, அனுஷ்டானம் முடிந்து இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு கீழ்காணும் மந்திரத்தை ஜெபிக்கவேண்டும். நாற்பத்தெட்டு நாட்கள் இதை தொடர்ந்து செய்ய வேண்டும்.

kutty sathan temple

இம்மந்திரத்தை ஜெபிப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே சாப்பிட வேண்டும், அதுவும் தாமாகவே சமைத்து சாப்பிட வேண்டும். யாருடனும் பேசுவதோ, தாம்பத்திய உறவுகளோ கூடாது. தென்னை ஓலையில் பச்சையாய்க் கிடுகு முடைந்து அதில் தான் படுத்துறங்க வேண்டும்.

குட்டிசாத்தான் வசிய மூலமந்திரம்

‘ஓம் குட்டிச்சாத்தா பகவதி சேவியா ஸ்ரீம் றீம் வயநமசி
சாத்தா வாவா, உன் ஆணை, என்னாணை, உன்னையும்
என்னையும் படைத்த பிரம்மாவின் ஆணை,
சக்தி ஆணை, சங்கரன் ஆணை வா உம் படு சுவாஹா  ‘.

இதை தினமும் 108 முறை என நாற்பத்தெட்டு நாட்கள் ஜெபிக்கவேண்டும்.

blackmagic,kutysathan,mandreegam
kutty sathan

குட்டி சாத்தான் உங்களை தேடி வந்துவிட்டார் :

மேலே சொன்னதை முறைப்படி செய்திருந்தால், நாற்பத்தெட்டாவது நாள் ஒரு சிறு மனித ரூபம்  விபூதி பையும், பிரம்பும் கொண்டு வரும்.உங்கள் கண்களுக்கு நன்றாகவே புலப்படும்.

அந்த சிறு மனித ரூபம் வந்து நீங்கள் பூஜை செய்யும் குளத்தின் ஓரமாய் தன் விபூதி பையையும்,பிரம்பையும் வைத்து விட்டு முழங்கால் ஆழ ஜலத்தில் இறங்கி ஸ்நானஞ்செய்வது போல் இறங்கும். அந்த சமயத்தில் பயப்படாமல் சீக்கிரம் மேற்படி சென்று பையையும்,பிரம்பையும் எடுத்துக்கொண்டு இடுப்பளவு தண்ணீரில் போய் நின்று கொண்டால், இக்குட்டி சாத்தான் அவ்வளவு சலத்திலிறங்காமல் விபூதி பையையும்,பிரம்பையும் கொடுவென்று கேட்கும். அப்போது நீங்கள் “நான் நினைக்கும் போதெல்லாம் வந்து நான் வேண்டுங்காரியங்களைத் தடையின்றி செய்வதாகச்
சிவன் மீது ஆணையிட்டுக் கொடு” என்று சொல்ல வேண்டும். அது ஆணையிட்டு கொடுத்த பின் விபூதி பையையும், பிரம்பையும் கொடுத்து விடவும். பின்னர் இது நம்முடனே இருக்கும். இக்குட்டி சாத்தான் மந்திரசித்தி பெற்றவரின் கண்ணுக்கு மட்டுமே தெரியும், மற்றவர்க்கு தெரியாது.

குறிப்பு : தாம் எதை சாப்பிட்டாலும் தனக்கு பின்புரம் உள்ள சாத்தானுக்கு காட்டி விட்டு தான் சாப்பிடவேண்டும். அப்படி செய்யாதவரை குட்டி சாத்தான் என்ன செய்யும் என்பது சொல்ல முடியாதவொன்று. அனால் அவர் தங்களுடன் இருக்கும் வரை இதை கடைப்பிடித்துத்தான் ஆகவேண்டும்.

கவனிக்கவும் : நான் இதை பரிசோதித்து பார்த்தேனோ இல்லையோ, அனால் இதை விளையாட்டாக எண்ணி யாரும் முயற்சிக்காதீர்.
அமானுஷ்ய அனுபவங்களை உணர நினைப்பவர்கள், இதை விளையாட்டாக என்ன மாட்டார்கள்,

குட்டி சாத்தான் கோவில் தொலைபேசி எண் : 099612 71444

மித்திரன்

அமானுஷ்யத்தை தேடி..                                    

.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.