லலிதா ஸஹஸ்ரநாமத்தில் – அம்பா நவமணிமாலை !

0 183

அம்பா நவமணிமாலை !

 லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பிகைக்கு இரு புறங்களிலும் லட்சுமியும் சரஸ்வதியும் வீற்றருள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நவமணிமாலை எனும் துதியை தினமும் பாராயணம் செய்தால் அம்பிகையின் திருவருளோடு சரஸ்வதி கடாட்சமும் லட்சுமி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும். கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் அருளும் அற்புத துதி இது:

1) வாணீம் ஜிதசுகவாணீமளிகுல
வேணீம் பவாம்புதித்ரோணீம் /
வீணாசுகசிசு பாணீ ம்
நதகீர்வாணீம் நமாமிசர்வாணீம் //

மறையவளே!கிளியை வெல்லும் மொழியாளே!வண்டன்னக்
கருங்குழலாளே!பிறவிக்கடல்கடக்கப் படகாவாளே!
வீணைக்கரத்தாளே!கிளியமருந்தோளாளே!வாணியும்
பணிந்திடும் பூங்கழலாளே! பவானியே!சரணமம்மா!

 வேதரூபியும் இனிமையால் கிளியின் இன்சொல்லை ஜெயித்தவளும் கருவண்டுக் கூட்டம் போன்ற பின்னலை உடையவளும் ஸம்ஸார ஸமுத்திரத்தைக் கடப்பதற்குத் தோணி போன்றவளுமான அம்பிகையே நமஸ்காரம். வீணை, கிளிப்பிள்ளையைக் கைகளில் ஏந்திய சரஸ்வதியினால் வணங்கப்பட்டவளே, பரமசிவனுடைய பத்தினியே, நமஸ்காரம்.

2) குவலயதளநீலாங்கீம்
குவலயரக்ஷைகதீக்ஷிதாபாங்கீம் /
லோசனவிஜிதகுரங்கீம்
மாதங்கீம் நௌமி சங்கரார்த்தாங்கீம் //

நீலக்கமல மேனியளே!தரணி காக்க
உறுதிபூண்டொளிரும் ஓரக்கண்ணாளே!
மானைப்பழிக்கும் எழில்விழியாளே!
மாதங்கி! சரணம்,சங்கரனின் பங்கிணியே!

 நீலோத்பல புஷ்பத்தின் இதழ் போன்ற சரீரத்தை உடையவளே, பூமண்டலத்தை ரட்சிப்பதையே முக்கிய விரதமாகக் கொண்டு, கடைக்கண் பார்வையால் அவ்வாறே அனுக்ரகிப்பவளே நமஸ்காரம். மான்களையும் தன் கண்களின் அழகால் வெட்கப்பட வைத்தவளே, மதங்க மகரிஷியின் புத்திரியே, சங்கரனின் பாதியுடலில் வசிப்பவளே, அம்பிகையே, நமஸ்காரம்.

3)கமலாகமலஜகாந்தாகரசாரச
தத்தகாந்தகரகமலாம் /
கரயுகலவித்ருதகமலாம் விமலாம்
கமலாங்கசூட சகலகலாம் //

கமலையும் கலைமகளும் கமலக்கரமேந்தும்
கமலமன்ன மென்கரங்களிரண்டிலும்
கமலமலர்கள் தாங்குந் தூயவளே!
சசிதரனின் சகலகலைகளின் வடிவே !

 லட்சுமி, சரஸ்வதி இவர்களின் தாமரைப் பூக்கள் போன்ற கரங்களில் வைக்கப்பட்ட இன்னொரு தாமரை போன்ற தளிர்க் கரங்களை உடையவளே, இரண்டு கைகளிலும் தாமரையைத் தரித்தவளே, நிர்மலமாயிருப்பவளே, சந்திர சூடனான பரமசிவனுடைய சகல வித்யையின் உருவமாக இருப்பவளே, பராசக்தியே நமஸ்காரம்.

4)சுந்தரஹிமகரவதனாம் குந்தஸுரதனாம்
முகுந்தநிதிஸதனாம் /
கருணோஜ்ஜீவிதமதனாம் ஸுரகுசலாயா
சுரேஷு க்ருதகதனாம் //

எழில்மதிமுகத்தாளே!முல்லைப்பூப்பல்லழகி!
அரும்பொருளின் உறைவிடமே!
கருணையால் காமனை உயிர்ப்பித்த உத்தமி!
சுரரைக்காக்க அசுரரை அழித்தவளே!

 அழகிய சந்திரன் போன்ற முகத்தையுடையவளே, மலர் மொக்கு போல் அழகிய பற்களையுடையவளே, ஒன்பது நிதிகளில் ஒன்றான முகுந்தம் என்ற நிதிக்கு இருப்பிடமானவளே, மன்மதனைக் கருணையினால் உயிர்ப்பித்தவளே, தேவர்களை ரட்சிக்க, அசுரர்களை வதைத்தவளே, பராசக்தியே நமஸ்காரம்.

5) துங்கஸ்தனஜிதகும்பாம் க்ருதபரிரம்பாம்
சிவேன குஹடிம்பாம் /
தாரிதசும்பநிசும்பாம் நர்த்திதரம்பாம்
புரோ விகததம்பாம் //

தாய்மைபொங்கும் மார்பினளே!அரனணைக்குமேனியளே!
சேயாய் சிவகுகனை உடையவளே!
சும்பநிசும்பரை நசித்தவளே!ரம்பைநடனம் ரசிப்பவளே!
தன்னலமறியா அன்பில் தாயாய்த்திகழ்பவளே!

 தாய்மைபொங்கும் மார்பினளே!அரனணைக்குமேனியளே! சேயாய் சிவகுகனை உடையவளே! சும்பநிசும்பரை நசித்தவளே!ரம்பைநடனம் ரசிப்பவளே!தன்னலமறியா அன்பில் தாயாய்த்திகழ்பவளே! உன்னதமான ஸ்தனங்களினால் அழகிய குடத்தையே பழிப்பவளே, பரமசிவனால் அணைத்துகொள்ளப்பட்டவளே, ஸ்கந்தனைக் குழந்தையாக அடைந்தவளே, சும்பன், நிசும்பன் என்ற அசுரர்களை வதம் செய்தவளே, எதிரே ரம்பை நடனமாட, அழகிய சபையைக் கொண்டவளே, அகங்காரமற்றவளே, பராசக்தியே நமஸ்காரம்.

6)அருணாதரஜிதபிம்பாம் ஜகதம்பாம்
கமனவிஜிதகாதம்பாம் /
பாலிதசுஜனகதம்பாம் ப்ருதுல
நிதம்பாம் பஜே சஹேரம்பாம் //

கொவ்வைச்செவ்விதழாளே!பாராளும் பேரருளே!
அன்னத்தைவெல்லும் மென்னடையாளே!
தன்னடியார் நன்னலம் காப்பவளே!பூரித்த
பின்னழகி!ஐங்கரனோடருள்பவளே!சரணம்!

 கோவைப்பழத்தையே மயக்கும் சிவந்த கீழுதடை உடையவளே, உலகங்களுக்கு மாதாவாகத் திகழ்பவளே, நளினமான நடையினால் அன்னத்தையே வென்றவளே, பக்தர்களின் சமூகத்தைக் காப்பாற்றுபவளே, பெரிதான பின்பாகத்தையுடையவளே, கணபதியுடன் சேர்ந்திருப்பவளே, பராசக்தியே நமஸ்காரம்.

7) சரணாகதஜனபரணாம் கருணா
வருணாலயாம் நவாவரணாம் /
மணிமயதிவ்யாபரணாம் சரணாம்
போஜாதசேவகோத்தரணாம் //

“கதி நீயே!”என்போரைக்காக்குங் கருணைக்கடலே!
மதிலொன்பது சூழ அமர்ந்து உலகாளும் மாதரசி!
மணிநிறைப்புனிதஅணி பூண்டவளே! நின்கமலப்
பதம்பணியுமடியாரை உய்விக்கும் உமையாளே!

 சரணமடைந்த ஜனங்களை ரக்ஷிப்பவளே, கருணைக் கடலாய் விளங்குபவளே, ஒளி மிகுந்த மணிகளை அணிகலன்களாக சூடியவளே! பாத கமலங்களை சேவிக்கின்றவர்களை ஆபத்தினின்றும் எந்நாளும் காப்பவளே, நமஸ்காரம்.

8)நதஜனரக்ஷாதீக்ஷாம் தக்ஷாம்
பிரத்யக்ஷதைவதாத்யக்ஷாம் /
வாஹீக்ருதஹர்யக்ஷாம்
க்ஷபிதவிபக்ஷாம் சுரேஷு க்ருதரக்ஷாம்//

தாள்பணிவோர் நலங்காக்கும் நல்லவளே!வல்லவளே!
காட்சிதரும் தெய்வங்களின் தலைவியாய்த் திகழ்பவளே!
வாகனமாம் சிங்கமேறி வளையவரும் சிங்காரி!
தானவரை வதம்செய்து தேவர்குலங்காத்தவளே!

 நமஸ்கரித்த ஜனங்களை ரக்ஷிப்பதையே விரதமாகக் கொண்டவளே, சாமர்த்தியமுள்ளவளே, பிரத்யக்ஷமான சூரியன் முதலிய தேவதைகளுக்கும் தேவதையாயிருப்பவளே, சிங்கத்தை வாகனமாகக் கொண்டவளே, சத்ருக்களை வதம் செய்தவளே, தேவர்களைக் காத்தவளே நமஸ்காரம்.

9)தன்யாம் சுரவரமான்யாம் ஹிமகிரி
கன்யாம் த்ரிலோகமூர்த்தன்யாம் /
விஹ்ருதசுரத்ருமவன்யாம் வேத்மி
வினா த்வாம் ந தேவதாஸ்வன்யாம் //

பொருள்வளமருள்பவளே!சுரருந்தொழுஞ் சிவையே!
கிரியரசன் பொன்மகளே!மூவுலக நாயகியே!
தெய்வீகத்தருக்கள் நிறை பூம்பொழிலில் நடைபழகும்
தூயவளே!உனையன்றி வேறுதெய்வம் நானறியேன்!

பாக்கியமுள்ளவளே, தேவ சிரேஷ்டர்களால் பூஜிக்கப்படுபவளே, இமயமலையின் மகளே, மூன்று உலகிலும் சிறந்தவளே!

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.