அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 03)

0 81

       அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 03)

 சகல வேதங்களையும், சர்வ சித்தாந்தங்களையும் உணர்ந்து பிரம்மானந்த ஸ்வரூபியாக விளங்கும் அகத்திய மாமுனிவர் ஒரு சமயம் சகல புண்ணிய ஸ்தலங்களுக்கும், தீர்த்தங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டார்.

 எங்கும் அஞ்ஞான இருள் சூழ்ந்திருப்பது கண்டு மனம் நொந்து, அவர்களை நற்கதிக்கு உய்விப்பது எங்ஙனம் என்று எண்ணியவாறே காஞ்சி நகருக்கு சென்றார்.

 உலக நலன் கருதி, அந்த உலகளந்த உத்தமனை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவரது தவத்தினால் மகிழ்ந்த மாலவன், அவர் முன் ஹயக்ரீவராகத் தோன்றினார்.

 பரவசமடைந்த அகத்தியர், அவரை பலவாறாக போற்றி துதித்தார். பக்தவத்சலனான பரந்தாமன், “முனிவரே !! உமது தவத்தால் உள்ளங்குளிர்ந்தோம். வேண்டும் வரம் யாது?” என வினவினார்.

 ஹே ஜனார்த்தனா !! இப்பாமர ஜனங்கள் பிறவிப் பெருங்கடலைக் கடந்து, பேரானந்தம் பெற ஒரு மார்க்கத்தினை உரைக்க வேண்டும் என்று வேண்டினார்.

 அதனைக் கேட்ட ஹயக்ரீவர், முன்னர் இதே கேள்வியை யாம் எழுப்பிய போது எனக்கு இந்த மார்க்கம் சிவனாரால் உபதேசிக்கப்பட்டது.

 பின்னர் இந்த கேள்வி பிரம்மனாலும், பின்பு துர்வாசராலும், இப்போது உம்மாலும் எழுப்பப்பட்டது. எனவே, யாம் உரைக்கும் இந்த மார்க்கம் உன் மூலம் உலகெலாம் பிரசித்தி பெற வாழ்த்தி வரமளிக்கிறோம் என்றார்.

 இந்த மார்க்கத்தினால் பாமரரும், பாவிகளும் கூட நற்கதியை அடைய முடியும். அது என்னவென்றால் அனைத்துக்கும் ஆதிகாரணமாக விளங்கும் ஜகன்மாதா பராசக்தியை பூஜிப்பதே ஆகும்.

 முனிவரே !! எவனொருவன் தனது மனம், வாக்கு, சொல், செயல் என அனைத்தையும் தேவியிடம் சமர்ப்பித்து தான் வேறு, தேவி வேறல்ல என்று உணர்கிறானோ, அவன் எளிதில் முக்தியை அடைகிறான்.

 மேலும் இம்முறையானது மிகவும் ரகசியமானது. உமது தபோபலத்தாலும், உலகம் உய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தினாலுமே உமக்கு இதை உபதேசிக்கிறோம்.

உன் மூலம் இவ்வுலகமும் இதனை உபதேசம் பெற்று சுகிக்கட்டும் என்றுரைத்தார்.

 இதைக்கேட்ட அகத்தியர், அவரை தனது ஆஸ்ரமத்திற்கு அழைத்து சென்று, தகுந்த ஆசனமளித்து மீண்டும் அவரடி பணிந்து அடுத்து வினவியதாவது:

 பரந்தாமா !! தாங்கள் கூறிய சக்தியின் வடிவம் எத்தகையது? என்னென்ன லீலைகளை நிகழ்த்துகிறது? எனக் கூற வேண்டினார்.

அதற்கு ஹயக்ரீவர் கூறிய பதிலை அடுத்த பதிவில் காணலாம்.
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.