அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 06)

0 67

கலி தோஷத்திலிருந்து விடுபட மார்க்கம் வேண்டி காஞ்சியில் தவமியற்றிய அகத்தியருக்குக் காட்சியளித்த ஹயக்ரீவர் அன்னை பராசக்தியை பூஜிப்பதே வழி என்றுரைத்து அவளுடைய அவதார லீலைகளை விளக்குகிறார்.

 இனி,இந்திரனின் கேள்விகளுக்கு விடையளித்துக் கொண்டிருந்த பிரகஸ்பதி திருட்டு பாவத்தைப் பற்றி கூறுகையில், அதற்கு உதாரணமாக புவியில் நடந்த ஒரு சம்பவத்தை உரைக்கிறார். த்விஜவர்மன் சரிதம்.

 முன்னொரு சமயம், காஞ்சி மாநகரிலே, வஜ்ரன் என்றொரு திருடன் வசித்து வந்தான். அவன் பல நாட்களாக சேர்த்து வந்த செல்வத்தை ஒளித்து வைப்பதற்காக காட்டிற்கு சென்று ஓரிடத்தில் குழி தோண்டி புதைத்து வைத்து விட்டான்.

 இதை அங்கிருந்த உயர்ந்த மரத்தில் அமர்ந்திருந்த வீரதத்தன் என்ற வேடன் கவனித்தான். அந்த திருடன் சென்ற பிறகு, அங்கு வந்த அவன் அவ்விடத்தை அகழ்ந்து அதிலிருந்து பத்தில் ஒரு பங்கு செல்வத்தை மட்டும் எடுத்து கொண்டு மீண்டும் அதே போல மூடி வைத்து விட்டு வீடு திரும்பினான்.

 எடுத்து வந்த செல்வத்தை அவன் மனைவியிடம் காண்பித்து, அது கிடைத்த விதத்தையும் கூறி, அந்த செல்வத்தை கொண்டு மதுவும், மாமிசமும் வாங்கலாம் எனக் கூறினான்.

 பொறுமையாக அவன் கூறுவதைக் கேட்ட அவன் மனைவி, திருமணத்திற்கு முன் எங்கள் வீட்டுக்கு வரும் பிராமணர்கள் ஒரு முறை என்னை பார்த்து, இவள் திருமணத்திற்கு பிறகு, திடீரென்று செல்வ வளம் காண்பாள் என்றனர். அது இன்று உண்மையானது.

 ஆயினும் அவர்கள் மேலும் கூறியதாவது: நம் உழைப்பில் கிடைக்கும் செல்வமே என்றும் நிலையானது. உழைக்காமல் கிடைக்கும் செல்வம் நிலைக்காது. அது பாபகரமானது. எனினும், இவள் மிக பாக்கியவதி. புண்ணியவதியாவாள்.

 இவ்வாறு கூறிய அவன் மனைவி, நமது உழைப்பில்லாது கிடைத்த இந்த செல்வத்தை கொண்டு தான, தர்மங்கள் செய்வோம் என்றாள்.

இது பற்றி அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

முடிவில் எவர் கருத்து வென்றதென்று அடுத்த பதிவில் காணலாம்.
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.