அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 08)

0 34

 திருட்டு பாவத்தைப் பற்றி பிரகஸ்பதி இந்திரனிடம் ஒரு கதை மூலம் கூறுகிறார், வஜ்ரன் என்றொரு திருடன் பதுக்கி வைத்த செல்வத்தின் ஒரு பகுதியை கவர்ந்து புண்ணியங்கள் பல செய்தான் வீரதத்தன் என்ற வேடன். அதனால் அவனுக்கு “த்விஜவர்மா” என்று பெயர் பெற்றான்.

 அவன் இறந்த பிறகு, அவர்களது ஆன்மாக்களை கொண்டு செல்ல யம கிங்கரர்கள், சிவ கணங்கள், விஷ்ணு தூதர்களிடையே சர்ச்சை எழுந்தது.

இனி : மூன்று தூதர்களும், அவர்கள் தத்தம் உலகிற்கே ஏற்றவர்கள் என்று வாதம் செய்தனர்.
அப்போது அங்கு வந்த தேவரிஷி நாரதர் அவர்களது பிரச்சினையை தீர்க்க முன்வந்தார், அவர் கூறியதாவது  இந்த வேடன், தனது சொந்த தனத்தினால் புண்ணியம் செய்யவில்லை. எனவே, எவருடைய பொருளைத் திருடி புண்ணியம் செய்தானோ, அவர்கள் அனைவரும் இறக்கும் வரை இவன் ஆவியாக சஞ்சரிக்கட்டும்.

இவன் மனைவி மிகுந்த புண்ணியவதி. எந்த பாபமும் செய்யாதவள். சிவபக்தை. எனவே, இவள் சிவலோகம் செல்லலாம் என்றார், இந்த முடிவினை கேட்ட சீலவதியின் ஆன்மா அங்கேயே அமர்ந்து கொண்டது. எனது கணவரை இந்தநிலையில் விட்டு விட்டு நான் மட்டும் கைலாயம் செல்ல மாட்டேன். அருள் கூர்ந்து, அவரது பாவம் தீர வழி கூற வேண்டினாள்.

 அவளது பதி பக்தியை கண்டு மகிழ்ந்த நாரதர், அவர்களுக்கு கர்மாவை செய்யத் தக்க புதிய உடலை வழங்கி, சத ருத்ரீய மந்திர உபதேசம் செய்தார். அதனை 1008 முறை ஜபிக்க சகல பாபங்களும் அகலும் என்று கூறி மறைந்தார்.

 அதன் படியே அவ்விருவரும் புனலாடி, விபூதி அணிந்து, சாம்ப சிவனை நினைத்து பூஜிக்க ஆரம்பித்தனர். அதனால் அவர்கள் புதிய தேகத்தினை அடைந்தனர்.

 பின்னர் வஜ்ரனும், அவன் திருடிய பொருட்களின் சொந்தக்காரர்களும் இறந்து அனைவரும் யமலோகத்தினை அடைந்தனர்,யமதர்மன அனைவரையும் நோக்கி, நீங்கள் செய்த அனைத்து பாபங்களும் தெய்வ சங்கல்பத்தினால் புண்ணியமாக மாறின. எனவே, அனைவரும் முதலில் புண்ணிய பலனை அனுபவிக்கிறீர்களா? அல்லது பாப பலனை அனுபவிக்கிறீர்களா? என்று கேட்டார்.

 அனைவரும் புண்ணிய பலனையே வேண்ட தர்மராஜன், த்விஜவர்மனின் புண்ணியத்தால் அனைவரும் புத்ர, மித்ர, களத்ராதிகளுடன் விமானத்தின் மீதேறி ஸ்வர்க்கம் செல்லுங்கள் என்றார் த்விஜவர்மா அனைத்து உலகங்களையும் தாண்டி கைலாயம் சென்று சிவ கணங்களுக்குத் தலைவனாகி இன்றுமங்கே வசிக்கிறான்.

 இதைக் கேட்ட இந்திரன், அப்புண்ணியத்தின் தாரதம்ய பாகுபாட்டை பிரகஸ்பதியிடம் வினவினார்,பாதி புண்ணியம் த்விஜவர்மனை சார்ந்தது, கால் பங்கு வஜ்ரனை சார்ந்தது, மீதி கால் பங்கு பொருட்களின் சொந்தக்காரர்களை சேர்ந்தது என்று பிரகஸ்பதி கூறினார்.

 மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் நான்கு வகையாக செய்யப்படும் பாபங்களும் பிராயச்சித்தங்களால் அகலும் என்றார்.
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.