அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 10)

0 48

 துர்வாசரின் சாபத்தால் தேவலோகத்தில் பல அபசகுனங்கள் தோன்றின. ஸ்வர்க்கம் களையிழந்தது. இதற்கான காரணத்தை இந்திரன் தனது குருவான பிரகஸ்பதியிடம் வேண்டினான்.

 அதற்கு அவர், அவன் முற்காலத்தில் தனது குருவான விஸ்வரூபனை எந்த காரணமுமின்றி அநியாயமாக கொன்றதால் தான் இந்த நிலைமை என்றார்.

இனி இந்திரன், தான் செய்த தவறினை உணர்ந்து, அதிலிருந்து விடுபட மார்க்கம் வேண்டினான்.
அந்நேரத்தில், மலாகன் என்னும் அசுரன் ஸ்வர்க்கத்தின் மீது படையெடுத்து வந்து அனைத்தையும் சேதப்படுத்தி கொண்டு இருந்தான்.

 அவனிடம் போர் புரிந்தும் இந்திரனால் வெற்றி பெற முடியவில்லை. உடனே, அங்கிருந்து மறைந்து அனைவரும் பிரம்மனிடம் முறையிட்டனர்,அதனைக் கேட்ட பிரம்மாவும், செய்வதறியாது அனைவருடனும் வைகுண்டம் சென்று மாலவனை பணிந்தார்.

அவர்கள் கூறியதைக் கேட்ட ஸ்ரீஹரி கூறினார் :

 ஓ தேவர்களே !! அஞ்சேல் !! நாம் உங்களை காப்பாற்றுவோம். திவ்ய மூலிகைகளை பாற்கடலில் இட்டு, அசுரர்களுடன் சமாதானம் செய்து கொண்டு மந்தர மலையை மத்தாகவும், வாசுகி நாகத்தை கயிறாகவும் கொண்டு, கடைந்து லக்ஷ்மி தேவியை வெளிக் கொணருங்கள்.

 அமிர்தம் அசுரர்களுக்கு கிடைக்கா வண்ணம் யாம் செய்கிறோம் என்று கூறி அனுப்பி வைத்தார். அதன் படியே அவ்விருவரும் உடன்பாடு செய்து கொண்டு பாற்கடலைக் கடைந்தனர்.

அசுரர்கள், அரவத்தின் விஷ ஜ்வாலையால் தேஜஸ் இழந்து எரிந்து துன்புற்றனர்.

 பகவான் ஸ்ரீஹரி, இருவருக்கும் பாற்கடலைக் கடைய சக்தி அளித்து கொண்டு, ஆதிகூர்மமாகி மலையை அடியிலிருந்து தாங்கினார். இன்னொரு ரூபத்தால் மேல்பாகத்தையும் தாங்கினார்.
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.