அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 20)

0 21

 மன்மதனின் சாம்பலிலிருந்து தோன்றிய பண்டாசுரன் தனது சகோதரர்களான விஷங்கன் மற்றும் விசுக்ரனுடன் சேர்ந்து மூவுலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் ரசத்தையும் வற்றச் செய்கிறான்.

 இனி:மூவுலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் ரசத்தை இழந்ததால் மிகவும் அவதியுற்றனர். இதனால் எதையும் செய்யும் ஆர்வமில்லாமல் இருந்தனர்.

காரணமில்லாமல் அனைவரும் கவலையுடனும், வெறுப்புடனும் காணப்பட்டனர். அனைவரும் சக்தியையும், வீரியத்தையும் இழந்தனர்.

 ரசம் தான் ஒரு மனிதன் தனது வாழ்வில் 4 விதமான புருஷார்‍த்தங்களையும் அடைவதற்கு உறுதுணையாக இருக்கிறது. இது குறித்து சிந்திப்போம்.

 உயிரினங்களில் ரசமானது பரமாத்மாவின் ஸ்வரூபமாகும்,ரசத்தினாலேயே சுக்கிலமும், சுரோணிதமும் உருவாகிறது. இவை இரண்டும் வீர்யம் எனப்படும்.

 வீர்யத்திலிருந்தே காந்தி, உல்லாசம், உற்சாகம், தயை, பிரீதி, தர்மம், புத்தி, விகாஸம்(வளர்ச்சி), பராக்கிரமம், சாஸ்திர விஞ்ஞானம், கலா சக்தி, சௌந்தர்ய திருஷ்டி ஆகியவை உண்டாகிறது.
தாவரங்களில் ரசமானது அக்னி சக்தியாக உள்ளது. அந்த அக்னியாலேயே தாவரங்கள் துளிர்த்து, கிளைத்து, வளர்ந்து காய், கனிகளை நல்குகிறது.

 காய்ந்த விறகுகள் தீப்பிடித்து எரிவதும் இந்த அக்னியால் தான் ஆகும்,ரசத்தினாலேயே அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியை அனுபவிக்கின்றன என்று வேதங்கள் உரைக்கிறது.
ரசம் என்பதே நமது உடலின் பிராண சக்தி.

 இவற்றை எல்லாம் நன்கு அறிந்ததாலேயே பண்டாசுரன் அனைவரையும் இந்த வகையில் தாக்கினான்,இவை அனைத்தையும் உணர்ந்த வசந்தன் ரதியிடம், சூரிய, சந்திரரும் தங்கள் தேஜஸை இழந்து தவிக்கின்றனர்.

 அவ்வளவு ஏன்? அன்னை பார்வதியும் அனைத்தையும் விடுத்து தவத்தில் மூழ்கி விட்டார்.
இவையெல்லாம், உன் கணவன் உயிர்த்தெழுந்து வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை உணர்த்துவதாகவே உள்ளது . எனவே வருந்தாதீர்கள் என்றான்.

அதைக் கேட்ட ரதி தேவியும், அன்னை லலிதாம்பிகையை குறித்து தவமியற்ற தொடங்கினாள்.
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.