அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 23)

0 31

 பண்டனின் சதியால் தான் சிருஷ்டி சோம்பி இருப்பதாக கூறிய பகவான் விஷ்ணு, இதற்கு உபாயம் வேண்டி பிரம்மாண்டத்திற்கு அப்பால் சென்று மஹா சம்புவை துதித்தனர்,அவர் இப்போது ஏற்பட்டிருப்பது காம பிரளயம் என்றும் இதிலிருந்து நம்மை லலிதாம்பிகையால் தான் காக்க முடியும் என்று கூறினார்.

 இனி : லலிதாம்பிகை அவதரிக்க மஹா யாகம் ஒன்றை நிகழ்த்த வேண்டும் என கூறி அதற்கான வழிமுறைகளை கூறத் தொடங்கினார்,இந்த யாகத்தினை யாமே வாயு வடிவில் ஹோதாவாக இருந்து நடத்துவோம் என்றார்.

 எனது சிதக்னியே யாகத்தில் அக்னியாக விளங்கும், ஏழு மகா சமுத்திரங்களில் கடைசி சமுத்திரத்தை வற்றச் செய்து அதுவே யாக குண்டமாக்கப்படும்,மீதமுள்ள ஆறு சமுத்திரங்களும் யாகத்தில் விடப்படும் ஆறு துளி நெய்யாகக் கொள்ளப்படும்.

ஐந்து விதமான சிருஷ்டியும் யாகத்திற்கு அளிக்கப்படும் பலியாகும்.

ஐந்து விதமான சிருஷ்டி :

1. மானஸ சிருஷ்டி(மனோ சக்தியால் பிறப்பது)
2. ஜரயவீ சிருஷ்டி (கருவிலிருந்து பிறப்பது)
3. அண்ட சிருஷ்டி (முட்டையிலிருந்து பிறப்பது)
4. ஸ்வேதஜ சிருஷ்டி (வியர்வையிலிருந்து பிறப்பது)
5. உத்பிஜ சிருஷ்டி(முளை விட்டு பிறப்பது)

 நிலம், நீர், காற்று, ஆகாயம், பர்வதங்கள் ஆகியவை பூஜா பொருட்களாக விளங்கும், இந்த மஹா யாகத்தின் முடிவில் நீங்கள் அனைவரும் ஆத்மார்த்தமான பக்தியுடன் யாக குண்டத்தில் குதித்து பூரணமாக சமர்ப்பணம் ஆக வேண்டும்.

 அப்படி செய்தால் அதிலிருந்து கோடி சூரியர்களின் பிரகாசத்துடன் அன்னை லலிதாம்பிகை தனது சக்ர ராஜ ரதத்தில், பாசம், அங்குசம், புஷ்பபாணம், இக்ஷு கோதண்டம் ஆகியவற்றுடன் அவதரிப்பாள்.

அதனை கொண்டு பண்டனை வதைத்து, மீண்டும் இப்போது உள்ளதை விட பன்மடங்கு அழகிய சிருஷ்டியை உண்டாக்குவாள்.

 மன்மதனையும் உயிர்ப்பிப்பாள் என்று கூறி அதனை நடத்த தேவர்களின் விருப்பத்தை கேட்டார்.
மகிழ்ச்சியுடன் அதற்கு தேவர்கள் ஒப்புக் கொண்டனர்.

                                                                                                                                                                        தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.