அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 30)

0 18

 மகா யாகத்திலிருந்து தோன்றிய தேவியின் பொருட்டு, பிரம்ம தேவர் கூறியது போல விஸ்வகர்மா அழகிய பட்டணத்தை படைத்தார். பின்னர் அவளுக்கு ஏற்ற கணவனை தேர்ந்தெடுக்க வேண்டினார்.

 இனி : கணவருடன் சேர்ந்து இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து தங்களை ஆளும்படி பிரம்ம தேவர் வேண்டினார்.

  புன்னகைத்த தேவி பிரம்மாதி தேவர்களை பார்த்து, “தேவர்களே !! யான் ஸ்வதந்த்ரையாய் என் இஷ்டம் போல சஞ்சரிப்பவள். என்னை போன்ற பதியையே யான் விரும்புகிறேன்” என்றாள்.

அதைக் கேட்ட பிரம்ம தேவர், “ஒரே வஸ்துவாய், இருமை அற்றவளும், சிவானந்த வடிவாய் உள்ள பிரம்மத்திடமிருந்து, பிரகிருதி தோன்றியது.”

 “அந்த பிரம்மமும், பிரகிருதியும் நீயே !! அனாதியானவள். அனைத்துக்கும் காரணமானவள். உனக்கு ஒரு காரணம் இல்லாதவள்.”

 “உலகை படைத்து, பரிபாலித்து, ஸம்ஹாரம் செய்யும் பஞ்ச பிரம்ம ஸ்வரூபிணீ நீ !! எனவே நீ காந்தர்வ மணம் புரிவது உனது சுதந்திரத்திற்கு பங்கம் தராது.”

 “லோக அனுகிரஹத்திற்காக ஒரு புருஷனை ஏற்க வேண்டும்” என்றார்.

 இதனை கேட்ட தேவி, ஒரு மாலையை கையிலெடுத்து ஆகாயம் நோக்கி வீசினாள். அது காமேஸ்வரர் கழுத்தில் விழுந்தது.

 தேவர்கள் அனைவரும் பரம சந்தோஷம் அடைந்தனர். இந்திராதி தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

 ஜகத்திற்கு மங்களமான சுப முகூர்த்தம் இதுவே !! இருவருக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்றார்.

 அதன்படி நாராயணன், பித்ரு, கந்தர்வர்கள் முன்னிலையில், ஜலதாரை விடுத்து, கல்யாணியான தேவியை காமேஸ்வரனுக்கு கன்யா தானம் செய்து விவாகத்தை பூர்த்தி செய்தார்.

அவ்விருவருக்கும் பிரம்மாதி தேவர்கள் காணிக்கைகளை சமர்ப்பித்தனர். அதனை இங்கு காணலாம்.

பிரம்மா – வஜ்ரம் போன்ற கரும்பு வில்
விஷ்ணு – வாடாத புஷ்பபாணம், குடை
வருணன் – நாகபாசம்
விஸ்வகர்மா – அங்குசம்
அக்னி – கிரீடம்
சந்திர, சூரியர் – குண்டலங்கள், ரத்னாகரம், நவரத்ன மயமான ஆபரணம்
சுக்ரன் – அக்ஷயமான மது பாத்திரம்
குபேரன் – சிந்தாமணி மாலை
கங்கை, யமுனை – சாமரங்கள்
மேலும், பிரம்மா, வசு, ருத்ரர், திக்பாலர், மருத், கந்தர்வர், ஆதித்யர், அஸ்வினி தேவர்கள் ஆகியோர் தத்தம் ஆயுதங்களை வழங்கியதோடு,
மிக்க வேகமும், பலமுள்ளதும், பருத்ததும், நோய், பசி, தாகம் முதலியவை இல்லாததுமான 4 குதிரைகளையும், ரதத்தையும், வஜ்ர துல்யமான ஆயுதங்களையும் அளித்தனர்.
(நாளை தேவியின் ராஜ்யாபிஷேகம்)
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.