அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 34)

0 14

பண்டனுடன் போரிட அன்னை ஸ்ரீலலிதை தனது சக்தி சேனையுடன் சூன்யக பட்டணத்தை நோக்கி சென்றனள்.

 இனி : சக்ர ராஜ ரத நாயகியான சாக்ஷாத் பராசக்தி பாசம், அங்குசம், புஷ்பபாணம், கரும்பு வில் ஆகியவற்றை ஏந்தி கோடி உதயசூரியர்களின் பிரகாசத்தை ஒத்த சிவந்த சரீர காந்தியுடன்,
திக்குகளில் பரவுகின்ற முகத்தின் காந்தியால் மேக மண்டலத்தினை சந்திர மயமாக்கிக் கொண்டு,பத்து யோஜனை தூரம் விஸ்தீரணம் கொண்ட முத்து குடையால் சந்திர மண்டலத்தினை பிரகாசப்படுத்திக் கொண்டு, விஜயை போன்ற முக்கிய பரிசாரிகைகள் நாற்புறமும் வெண்சாமரம் வீச, தேவர்கள் துதிக்க, தன்னை வணங்கும் மும்மூர்த்திகளையும் தனது கடாக்ஷ வீக்ஷணத்தால் அருள் புரிந்து கொண்டும்.

 ஜய !! ஜய !! என அக்ஷதையை தூவி அப்சரஸ்கள் வணங்க, யுத்த கோலத்தால் மனோஹரமாக விளங்கும் திதி நித்யாக்கள் மற்றும் பலர் புடை சூழ, நூறு யோஜனை தூரம் நீளமான கொடி பறக்கும் ஸ்ரீசக்ரராஜ ரதத்திலேறி, நவாவரணா தேவதைகள் பரம்பரை சூழ, சம்ஸார தாபத்தை தணிப்பதில் சாமர்த்தியம் நிறைந்த 25 திருநாமங்களால் தேவர்கள் துதிக்க, தேவி யுத்த களத்திற்கு சென்றாள்.

அகத்தியர் : ஸ்வாமின் !! கர்ணாம்ருதமான அந்த 25 திருநாமங்களை கூறி அருள்புரியும் !!

ஹயக்ரீவர் : அவற்றை கூறுகிறேன். கவனமாகக் கேள் !!

1. ஸிம்ஹாசனேஸி
2. லலிதா
3. சாம்ராஜ்ஞீ
4. மஹாராக்ஞீ
5. சக்ரவர்த்தினி
6. சக்ரிணி
7. சக்ரநாதா
8. சக்ரேஸ்வரி
9. (Cha)சாபிநீ
10. வராங்குசா
11. திரிபுரா
12. சுந்தரி
13. மஹா திரிபுர சுந்தரி
14. மஹாதேவி
15. மஹாவித்யா
16. காமேசீ
17. பரமேஸ்வரி
18. காமராஜப்ரியா
19. காமகோடிகா
20. ஸர்வபாடலா
21. குலநாதா
22. ஆம்நாயநாதா
23. ஸர்வாம்நாய நிவாஸினீ
24. சிவாநங்க வல்லபா
25. ச்ருங்கார நாயிகா

இந்த 25 திருநாமங்களால் லலிதா பரமேஸ்வரியை துதிப்பவர், சகல சௌபாக்கியத்தையும், அஷ்ட சித்திகளையும், கீர்த்தியையும் பெறுவர்.

இத்தகைய பயங்கர சேனையை நடத்திக் கொண்டு ஸ்ரீலலிதை பண்டனை எதிர்க்க சென்றாள்.
(நாளை ரத வர்ணனைகள்)
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.