அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 35)

0 13

 பண்டாசுரனை எதிர்த்து போரிட அன்னை ஸ்ரீலலிதை தனது சக்தி சேனையுடன் சூன்யக பட்டணத்தை நோக்கி சென்றனள்.

இனி : இதுவரை சக்தி சேனைகளையும், பரிவாரங்களையும் கண்டோம்.

 ஸ்ரீலலிதோபாக்யானத்தில் அடுத்த 3 அத்தியாயங்களில், சக்ரராஜம், கேயசக்கரம் மற்றும் கிரி சக்கரமெனும் ரதங்களின் வர்ணனையும், அதிலுள்ள தேவதைகளின் வர்ணனையையும் விவரிக்கின்றன,பதிவின் நீளம் கருதி, அதனை சுருக்கமாக பதிகிறோம்.

ரதங்களின் வர்ணனை

1. ஸ்ரீசக்ரராஜ ரத வர்ணனை

அகத்தியர் : சக்ர ராஜ ரதத்திலிருக்கும் தேவதைகளைப் பற்றி கூறுங்கள்.
ஹயக்ரீவர் : அன்னை ஸ்ரீலலிதை வீற்றிருக்கும் ஸ்ரீசக்ரராஜ ரதமானது 4 யோஜனை அகலமும், 10 யோஜனை உயரமும், 9 பர்வாக்களையும் கொண்டதாகும்.
9வது பர்வா : பத்து ஸித்திகள், மஹாலக்ஷ்மீயுடன் சப்த மாதர்கள், பத்து முத்ரா தேவிகள். இவர்கள் அனைவரும் பிரகட யோகினிகள் எனப்படுவர்.
8வது பர்வா : சந்திர கலைகளின் வடிவான 16 சக்திகள். இவர்கள் அனைவரும் குப்தயோகினிகள் எனப்படுவர்.
7வது பர்வா : 8 அநங்க சக்திகள். இவர்கள் அனைவரும் குப்ததர யோகினிகள் எனப்படுவர்.
6வது பர்வா : சம்பிரதாய யோகினிகள் என்னும் 14 சக்திகள்.
5வது பர்வா : குலோத்தீர்‍ண யோகினிகள் என்னும் 10 சக்திகள்.
4வது பர்வா : நிகர்ப்ப யோகினிகள் என்னும் 10 சக்திகள்.
3வது பர்வா : ரஹஸ்ய யோகினிகள் என்னும் 8 வாக்தேவதைகள்.
2வது பர்வா: காமேசீ, வஜ்ரேசீ, பகமாலினீ என்னும் 3 சக்திகள். இவர்கள் அனைவரும் அதிரஹஸ்ய யோகினிகள் எனப்படுவர்.

 இவர்கள் தேவிக்கு சமமான பலமுள்ளவர்கள். அவளுக்கு மிக அந்தரங்கமானவர்களும் ஆவர்.
ஆனந்த மயமான மஹா பீடமான மத்திய பர்வாவை சுற்றிலும் திதி நித்யாக்கள் என்னும் 15 சக்திகள் வீற்றிருக்கின்றனர்.

இவர்கள் 15 பேரும், ஸ்ரீதேவிக்கு சமமான ரூபமும், ஆயுதங்களையும் உடையவர்கள்.

 மத்தியில் ஸ்ரீதேவி வீற்றிருக்கிறாள், இந்த ரதத்திற்கு இரா தேவி, திரிபுர பைரவி, சம்ஹார பைரவர், ரக்த யோகினி, வல்லப ஸாரஸர், சாமுண்டா என்னும் 6 சாரதிகள் உள்ளனர்.

2. கேயசக்ர ரத வர்ணனை

 ஸ்ரீலலிதையின் மந்திரிநாதா வீற்றிருக்கும் கேயசக்கரம் என்னும் திவ்ய ரதம் 7 யோஜனை உயரமும், 7 பர்வாக்களையும் கொண்டது,இந்த ரதத்திற்கு ஹஸந்திகை என்னும் சாரதி உள்ளாள்.
நடு பர்வாவில் ஸ்ரீதேவிக்கு மிகப் பிரியமான சங்கீத யோகினி விளங்குகிறாள்.

1முதல் பர்வா : மந்திரிணி தேவி
2வது பர்வா : ரதி, பிரீதி, மனோஜா
3வது பர்வா : த்ராவிணீ, சோஷிணீ, பந்திநீ, மோஹினீ, உன்மாதிநீ என்னும் மன்மத பாண தேவதைகள்.
அதனடியில், காமராஜன், கந்தர்ப்பன், மன்மதன், மகரத்வஜன், மநோபவன் ஆகியோர் வசிக்கின்றனர்.
4வது பர்வா : சண்டியுடன் கூடிய சப்த மாதர்கள், அதனடியில் லக்ஷ்மி, சரஸ்வதி, ரதி, பிரீதி, கீர்த்தி, சாந்தி, புஷ்டி, துஷ்டி ஆகியோர் வசிக்கின்றனர்.
5வது பர்வா : வாமா, ஜ்யேஷ்டா, ரௌத்ரி, சாந்தி, ஸ்ரத்தா, சரஸ்வதி, கிரியாசக்தி, லக்ஷ்மி, துஷ்டி, மோஹினீ, பிரமதினி, ஆச்வாஸினீ, வீசீ, வித்யுன்மாலினி, சுரானந்தா, நாகபுத்திகா என்னும் சக்திகள் விளங்குகின்றனர்.
6வது பர்வா : அஸிதாங்கர், ருரு, சண்டர், க்ரோதர், உன்மத்தர், கபாலி, பீஷணர், ஸம்ஹாரர் என்னும் அஷ்ட பைரவர்கள் விளங்குகின்றனர்.
7வது பர்வா : மாதங்கி, ஸித்த லக்ஷ்மி, மஹாமாதங்கி, மஹாஸித்த லக்ஷ்மி ஆகிய 4 சக்திகள் விளங்குகின்றனர்.

 அதே பர்வாவின் கீழே, கணபர், க்ஷேத்ரபர், துர்க்காம்பர், வடுகர் ஆகியோர் சஸ்திரபாணிகளாக திகழ்கின்றனர்.

 இன்னும் சிறிது கீழே, சரஸ்வதி, லக்ஷ்மியுடன், சங்கநிதி, பதுமநிதி ஆகியோர் யுத்த கோலத்தில் இருக்கின்றனர்,மேலும், இநதிரன் முதல் விஷ்ணு வரை 10 திக்குகளின் சக்ர நாயகர்கள் சக்தி வடிவாக அங்கு வசிக்கின்றனர்.

 இந்த கேய சக்ர ரத பர்வாவில் வசிப்பவர்களின் பெயரை கேட்பவர்கள், சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு ஜயத்தை பெறுவார்கள்.
(நாளை கிரிசக்ர ரத வர்ணனை)
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.