அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 36)

0 13

ஸ்ரீலலிதை மற்றும் மந்திரிநாதா தேவி வீற்றிருக்கும் ஸ்ரீசக்ரராஜ ரதம் மற்றும் கேயசக்கர ரத வர்ணனைகளை கண்டோம்.

இனி :கிரிசக்கர ரத வர்ணனை,ஸ்ரீலலிதையின் சேனாதிபதியாக விளங்கும் ஸ்ரீதண்டநாதை வீற்றிருக்கும் கிரிசக்ர ரதம் 6 யோஜனை உயரமும், 5 பர்வாக்களையும் கொண்டது.

இந்த உத்தம ரதத்திற்கு ஸ்தம்பினி என்னும் சக்தி சாரதியாக விளங்குகிறாள்.

1வது பர்வா : பிந்து என்னும் முதல் பர்வாவில் தண்டநாதா தேவி வீற்றிருக்கிறாள்,அங்கே அவளோடு, வாராஹி, வார்த்தாளீ ஆகியோரும் வசிக்கின்றனர்.

2வது பர்வா : ஜ்ரும்பினீ, மோஹினீ, ஸ்தம்பினி.

3வது பர்வா : அந்திநி, ருந்திநி, ஜம்பினி, ஸ்தம்பினி, மோஹினீ.

4வது பர்வா : பிராஹ்மி, மாஹேச்வரீ, கௌமாரி, வைஷ்ணவி, மாஹேந்த்ரி, சாமுண்டா.

 அவர்களின் நாற்புறமும் யாகினி, ராகினி, லாகினி, காகினி, சாகினி, டாகினி, ஹாகினி ஆகியோர் வசிக்கின்றனர்,மேலும் அங்கேஅங்கேயே இரு புறமும், குரோதினி, ஸ்தம்பினி என்னும் 2 சக்திகள் சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றனர்.

 ரதத்தின் இரு பக்கங்களிலும் ஹலம், முஸலம் என்ற இரண்டு ஆயுதங்களும் தேவதா ஸ்வரூபம் கொண்டு நிற்கின்றன,அதே பர்வாவில், கடகடவென்று பற்களை கடிக்கும் சப்தத்தால் உலகை செவிடாக்கும் சண்டோச்சண்டன் என்பவன் ஆயுதங்களுடன் ஸதா தேவியை சேவித்துக் கொண்டிருக்கிறான்.

5வது பர்வா : வார்த்தாளீ, வாராஹி, வராஹமுகி, அந்திநி, ருந்திநி, ஜ்ரும்பிநி, மோஹினீ, ஸ்தம்பிநி, என்னும் 8 சக்திகள் 8 திசைகளிலும், அல்லும், பகலும் தேவியை சேவிக்கின்றனர்.
அங்கே இடது புறத்தில், ஒரு குரோச தூரம் (500 முழம்) உயரமுள்ள மிக பயங்கரமான மஹிஷ வாகனம் நிற்கின்றது.

 லோக க்ஷேமத்தை நாடி ஸ்ரீலலிதை செல்லும் போது, அனைத்து தேவர்களும், மும்மூர்த்திகளும், மற்ற எண்ணிறந்த கணங்களும் சூழ்ந்திருந்தனர்,சக்ர ராஜ ரதம் சென்றவிடத்தே கேயசக்கர ரதமும், கேயசக்ர ரதம் சென்றவிடத்தே கிரிசக்ர ரதமும் செல்வது, மேரு, மந்தரம், விந்தியம் ஆகிய மூன்று பர்வதங்களும் ஓரிடத்தில் சேர்ந்தது போலவும், மூவுலகமும் நடந்து செல்வது போலவும் இருந்தது.

 ஸ்ரீலலிதா தேவி இவ்வளவு சிறப்புடன் பண்டனை வெல்ல கிளற்பிய போது, பூமி நடுங்கியது. சர்வ பூதங்களும் கலங்கியது.

 தேவ துந்துபி முழங்கியது. பூமாரி பொழிந்தது. கந்தர்வர்கள் கானம் செய்தனர்,சரஸ்வதி ஜய மங்கள சப்தங்களை கூறினாள். தேவியை துதித்து ஆனந்த பரவசர்களாகி சக்திகள் ஆடிபப்பாடி சென்றனர்.

 வசிஷ்டர் முதலிய சப்தரிஷிகள் நான்கு வேதங்களாலும் ஜயஸ்ரீயை விருத்தி செய்து ஆசி கூறினர்.
(நாளை சூன்யக நகரத்தில் உத்பாதங்கள்)
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.