அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 56)

0 22

பண்டாசுரனை வதைத்த அம்பிகையை அண்ட சராசரமும் கண்டு ஸ்தோத்திரம் செய்து வணங்கியது.

இனி : பிரம்மாதிகள் செய்த ஸ்ரீலலிதா ஸ்துதி – தொடர்ச்சி

எப்பொழுதும் அணிமா முதலிய அஷ்டஸித்திகளால் சேவிக்கத்தக்கவளே! சதாசிவ ஸ்வரூபமாய் பிரகாசிக்கும் மஞ்சத்தில் விளங்குபவளே!

அழகானவளே! ஒப்புயர்வற்ற பாதங்களை உடையவளே! உலகைப் படைத்தவளே! உனக்கு நமஸ்காரம்!

பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்களால் சேவிக்கப்படுபவளே! பிரம்மனுக்கு பிரியமானவளே! பிராஹ்மணியே!

பந்தத்தை அறுப்பவளே! பிரம்மானந்த ஸரஸின் ராஜஹம்ஸமே! பிரம்மேஸ்வரி எனப்படும் ஸ்ரீலலிதாம்பிகையே! உனக்கு நமஸ்காரம்!

ஸம்க்ஷோபிணி முதலிய முத்ரா தேவிகளால் சேவிக்கப்படுபவளே! சம்சார துக்கத்தை அகற்றுபவளே! சம்சார லீலைகளை செய்பவளே!

தாமரை இதழ்கள் போன்ற கண்களை உடையவளே! ஆதிநாதையே! ஸ்ரீலலிதே! உனக்கு நமஸ்காரம்!

காமாகர்ஷிணி முதலிய 16 நித்யகலா தேவிகளால் சேவிக்கப்படுபவளே! அழிவற்றவளே! தங்கு தடையின்றி பிரவாகிக்கும் கருணை பிரபஞ்சமே! கறுத்த முன்மயிருள்ளவளே! உனக்கு நமஸ்காரம்!

மதங்கொண்ட அநங்க குஸுமா முதலிய அநங்க தேவதைகளால் எப்பொழுதும் சேவிக்கப்படுபவளே!

அமங்கலத்தை தொலைப்பவளே! மாத்ருகா ஸ்வரூபமானவளே! சத்ருவர்க்கத்தை தொலைப்பவளே! ஸ்ரீலலிதே! உனக்கு நமஸ்காரம்!

ஸம்க்ஷோபிணி முதலிய 14 கிரணங்கள் வடிவமான சக்தி கூட்டத்தினால் சூழப்பட்ட, உதாரமாய் பிரகாசிக்கும் உடலை பரிப்பவளே!

விளையாட்டு நிறைந்தவளே! சுப்ரமான எண்ணங்களை உடையவளே! சுத்தமான பாதங்களை உடையவளே! உனக்கு நமஸ்காரம்!

ஸர்வசித்திபிரதை முதலிய சக்தி கூட்டத்தை உடையவளே! ஸர்வக்ஞரால் அறியப்படும் பாதாரவிந்தம் உள்ளவளே!

எல்லாவற்றிற்கும் மேலானவளே! எங்கும் இருப்பவளே! எல்லா சித்சித்திகளையும் அளிப்பவளே! ஸ்ரீலலிதே! உனக்கு நமஸ்காரம்!

ஸர்வக்ஞதா முதலிய மற்ற தேவிகளாலும் ஆச்ரயிக்கப்பட சக்ரபூமியை உடையவளே! சமஸ்த தேவர்களின் விருப்பத்தையும் பூர்த்தி செய்பவளே! எல்லா உலகிற்கும் தாயே! என்னை ரக்ஷிப்பாயாக!

நமஸ்கரிக்க தக்கவளே! வசினி முதலிய வாக்விபூதிகளை விருத்தி செய்யும் சக்ரகாந்தியை வகிப்பவளே! மேகம் போன்ற கறுத்த முன்மயிருள்ளவளே! வாக்கின் கடலே! வரமளிப்பவளே! சுந்தரி! உலகை ரக்ஷிப்பாயாக!

                                                                                                                                                                        தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.