அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 60)

0 67

 

பண்டாசுர வதத்திற்குப் பிறகு மும்மூர்த்திகளும் காமேஸ்வரர் மற்றும் லலிதாம்பிகைக்கு ஆலயம் அமைக்க ஆசை கொண்டு விஸ்வகர்மா மற்றும் மயனை அழைத்து 16 க்ஷேத்ரங்களில் ஸ்ரீநகரத்தினை நிர்மாணித்தனர்.

இனி : ஸ்ரீநகர நிர்மாணம் – தொடர்ச்சி

ஸ்ரீ நகரம் பலவிதமான கோட்டைகள், நந்தவனங்கள், ஆறுகள், ஓடைகள் சூழ்ந்து உள்ளது.

மனம் புத்தி, அஹங்காரம் என்ற தத்துவங்களிலும், சூரியன் சந்திரன் மன்மதன் ஆகியவர்களின் ப்ரகாச ஒளியுடனும் ப்ரகாசமாக உள்ளது.

அதற்குள் “மஹாபத்மாடவீ” என்ற நந்தவனம் இருக்கிறது. அதன் நடுநாயகமாக “சிந்தாமணிக்ருஹம்” என்று கூறப்படும் பிந்து பீடத்தில் பராபட்டாரிகா என்று போற்றப்படும் ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்து அருள்பாலிக்கிறாள்.

ஆகவே ஸர்வேஸ்வரியிடம் செல்ல அம்பிகை இருப்பிடமான ஸ்ரீ நகரத்தைச் சுற்றியுள்ள கோட்டை, நந்தவனம், ப்ரகாரங்களையும் அதன் சக்திகளையும் வழிபட்டு அவர்களின் உத்தரவையும் அநுக்கிரஹத்தையும் பெற்று ஸர்வேஸ்வரியிடம் செல்ல வேண்டும் என்பது கடமை ஆகிறது.

ஆக ஸ்ரீ நகரத்தின் கோட்டை முதலியவைகளையும் அதன் தேவதைகளையும் பற்றி தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது.

1. இரும்புக் கோட்டை

ஸ்ரீ நகரத்தின் முதல் கோட்டையான இரும்புக் கோட்டை ஆயிரத்து அறுநூறு யோஜனை ( 1 யோஜனை = 9 மைல்) அகல, நீளம் உள்ளது.

நான்கு திசைகளிலும் நான்கு யோஜனை தூரம் உயர்ந்த வாயிற்படிகள் உள்ளன. மிக உயர்ந்த தூண்களையும், கோபுரங்களையும் உடையது.

வாயிற்படிகளும், தலை பாகமும் ஒரு மைல் விஸ்தாரம் மற்றும் உயரமானது. ஒவ்வொரு வாயிற்படியிலும் ஒரு யோஜனை உயரமும், ஒரு மைல் அகலமுமுள்ள 2 இரும்பு கதவுகள் உள்ளது.

ஒவ்வொன்றின் இரு தாழ்ப்பாள்களும் அரை மைல் நீளமானது. இங்ஙனம் 4 வாயிற்படிகளிலும் கதவு முதலியவை சமானமாயிருக்கின்றன.

(நாளை ஸ்ரீ நகரின் 2, 3, 4 கோட்டைகளை காணலாம்)

                                                                                                                                                                        தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.