அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 62)

0 15

அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் முதல் நான்கு பிரகாரங்களின் வர்ணனையை கண்டோம்.

இனி :

5. பித்தளை கோட்டை ஈயக்கோட்டைக்கு ஏழாவது யோஜனை தூரத்தில் முற்கூறிய கோட்டைகளப் போல் அமைந்துள்ள பித்தளை கோட்டை இருக்கிறது.

ஈயக்கோட்டைக்கும் பித்தளை கோட்டைக்கும்இடையில் உள்ள பிரதேசம் “ஹரிசந்தனவாடிகை” எனப்படும்.

இங்குள்ள ஹரிசந்தன விருக்ஷங்கள் கற்பக மரங்களைப் போல பல புஷ்பங்கள் நிறைந்தவை.

இங்கு நீலோத்பலம், செந்தாமரை, வெண்தாமரை முதலிய அழகான புஷ்பங்களுடன் கூடிய தடாகங்கள் நிறைந்து இருக்கிறது

இந்த கோட்டைகளெல்லாம் முதலில் கூறிய கோட்டையைப் போல அழகிய நான்கு துவாரங்களும், ஒவ்வொரு வாயிற்படியிலும் கோபுரங்களும், மகுடங்களும் அமையப் பெற்றவை.

6. பஞ்சலோக கோட்டை

பித்தளை கோட்டைக்கு ஏழு யோஜனை தூரத்தில் முற்கூறிய கோட்டைகளுக்கு சமமான பஞ்சலோக கோட்டை ஒன்றுண்டு.

பித்தளை கோட்டைக்கும், பஞ்சலோக கோட்டைக்கும் இடையில் உள்ள பிரதேசம் மந்தார விருட்சங்கள் நிறைந்த “மந்தாரத்ருமவாடிகை” எனப்படும்.

7. வெள்ளி கோட்டை

பஞ்சலோக கோட்டைக்கு ஏழு யோஜனை தூரத்தில் பல சிகரங்களையும், தூண்களையும் உடைய, முற்கூறிய சகல லக்ஷணங்களும் பொருந்திய பிரகாசமான வெள்ளி கோட்டை ஒன்றிருக்கிறது.

அவ்விரு கோட்டைகளுக்கும் இடையில் உள்ள பிரதேசம் “பாரிஜாதத்ருமவாடிகை” எனப்படும்.

அது திவ்யமான நறுமணமுள்ளது. புஷ்பங்களாலும், பழங்களாலும் பரிமளிப்பது.

                                                                                                                                                                        தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.