அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 63)

0 26

அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் உலோக கோட்டை வர்ணனைகளை கண்டு வருகிறோம்.

இனி :

ஸ்ரீநகர நிர்மாணம் – தொடர்ச்சி

8. தங்க கோட்டை

நெருப்பின் ஜ்வாலை போல் பிரகாசிக்கும் தங்கத்தால் ஆன “தங்க கோட்டை” எட்டாவதாக இருக்கிறது. இதில் ரத்தினங்கள் இழைக்கப்பட்ட கோபுரங்களில் நல்மணிகளால் செய்த பொம்மைகளும் சேர்ந்து இருக்கிறது.

இந்த தங்க கோட்டைக்கும் வெள்ளி கோட்டைக்கும் இடையில் கதம்ப விருக்ஷங்கள் நிறைந்த “கதம்பவன வாடிகை” இருக்கிறது.

ஆங்குள்ள அழகிய கடம்ப மரங்கள் இரண்டு யோஜனை தூரம் வளர்ந்திருக்கின்றன.

அதில் மகரந்தம் நிறைந்த புஷ்பங்களும் செந்தேன் அருவியும் நறுமணத்துடன் கூடிய மிதமான காற்றும் வீசிக்கொண்டு இருக்கிறது.

இவைகளிலிருந்து போகத்தை அளிக்கும் காதம்பரீ எனும் யோகினி தோன்றினாள். இவள் மந்திரிணி தேவிக்கு எப்போதும் பிரியமானவள்.

நல்ல நிழலைத் தரும் நீப மரங்களும், தளிர் நிறைந்த மகிழ மரங்களும் அங்கு இருக்கின்றன. வாசனையில் ஆசை கொண்ட வண்டுகள் ஜங்காரம் செய்து கொண்டு மரங்களை சூழ்ந்து இருக்கின்றன.

அங்கு மந்திரிநாதைக்கு மனோஹரமான ஆதி அரண்மனை இருக்கிறது.

கதம்பவனவாடியின் நான்கு மூலைகளிலும் ஐந்து யோஜனை தூரம் மற்றும் அகலமுமுள்ள வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆங்கு ஏழு ஆவரணங்கள் அமையப் பெற்றுள்ளது.

இங்ஙனமே மற்ற மூலைகளிலும் வீடுகள் அமைந்துள்ளது. அங்கு எல்லா இடங்களிலும் மிக அழகான விருக்ஷங்களும் நிறைந்திருக்கின்றன. அங்கு சியாமளை என்னும் மந்திரிணி தேவி வாசம் செய்கிறாள்.

ஆயினும், தேவியை சேவிப்பதற்காகவே மந்திரிணிக்கு மஹாபத்மாடவியின் மத்தியில் மற்றோர் நகரமுண்டு.

இந்நகரிலேயே இருந்தால் வெகு தூரத்தில் இருக்கும் தேவியை பிரதி தினம் சேவிக்க முடியாது என்று எண்ணி, தேவதச்சனும், மயனும் மந்திரிணிக்கு சிந்தாமணி கிருஹத்திற்கு வெகு சமீபத்தில் ஒரு வீடும் ஏற்படுத்தினர்.

காதம்பரீ எனும் மதுவால் சிவந்த நேத்ரங்களை உடையவர்களும், மிகக் கொண்டாடத் தக்கவர்களுமான மாதங்க கன்யகைகள் அழகிய வீணையுடன் பாடிக் கொண்டு விளையாடுகிறார்கள்.

(மஹாபத்மாடவீ சம்ஸ்தா கதம்பவனவாஸினீ – லலிதா சஹஸ்ரநாமம்)

                                                                                                                                                                        தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.