அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 64)

0 28

அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகர கோட்டை வர்ணனைகளை கண்டு வருகிறோம்,சியாமளா தேவி வசிக்கும் கதம்பவனத்தின் அழகை கண்டோம்.

இனி :மாதங்க கன்யா ஜனனம்

அகத்தியர் : மதங்கர் என்பவர் யார்? கன்யகைகள் அவரிடம் எப்படி தோன்றினர்? அவர்கள் எப்பொழுது எப்படி மந்திரிநாதையை சேவிக்கின்றனர்?

ஹயக்ரீவர் : தபோநிதியான மதங்கர் உக்ரமான தபஸின் சக்தியால் எல்லோருக்கும் ஆக்ஞையிட வல்லவர்.

அவருடைய புத்திரரான மாதங்கர் முத்ரிணியான மந்திரநாயகியை கோரமான தவத்தினால் ஆராதித்தார். மகிழ்ந்த மந்திரிணி தேவி அவர் முன்பு தோன்றி, “வேண்டும் வரம் கேள்!” என்றாள்.

தபோநிதியான மாதங்கமுனி தன்னெதிரே தோன்றிய சியாமளாம்பிகையை பணிந்து பின்வருமாறு கூறினார்.

மாதங்கமுனி : ஓ தேவி! உன்னை நினைத்த மாத்திரத்தில் அணிமாதி சித்திகளும் கிட்டி விட்டது. இருப்பினும் ஒரு வரம் கேட்கிறேன். அதை பூர்த்தி செய்ய வேண்டும்.

முன்னொரு சமயம் ஹிமவானுடன் நட்பினால் கொஞ்சம் பரிகசித்து விளையாடுகையில் அவர் தன்னை கௌரியின் தந்தை என சிலாகித்துப் பெருமை கொண்டார்.

அந்த பாக்கியம் எனக்கு இல்லாமல் போயிற்று. எனவே, நீ எனக்கு பெண்ணாகப் பிறந்து என் பெயரால் மாதங்கி என பிரசித்தி பெற வேண்டும் என்று வேண்டினார்.

அதைக் கேட்ட மந்திரிணி தேவி, “அங்ஙனமே ஆகட்டும்” என்று கூறி மறைந்தாள்.

பின்னர் மாதங்கமுனியின் மனைவியின் ஸ்வப்னத்தில் ஸதாமதை எனும் தேவி தோன்றி தனது காதுகளில் அணிந்திருந்த புஷ்பத்தில் ஒன்றை எடுத்து கொடுத்தாள்.

அதன் பிரபாவத்தினால் மாதங்கமுனியின் மனைவி ஸித்திமதி தனது கர்ப்பத்தில் லகுச்யாமையை தரித்தனள். பின்னர் தக்க சமயத்தில் பிறந்து மாதங்கி என்னும் பெயரை அடைந்தாள்.

மூல வித்யையான சியாமையிடமிருந்து ஓரம்சமாய் தோன்றியதால் லகுச்யாமா என்றும் அழைக்கப்பட்டாள்.

தனது தந்தையிடம் இருந்து சிருஷ்டி மஹாவித்யையை கற்றுக் கொண்டு, தனக்கு சமமாகவும், அழகாகவும் கன்யகைகளை கோடி கோடியாக படைத்தாள்.

மாதங்கி கூட்டத்துடன் லகுச்யாமா மஹாச்யாமாவின் அங்க சக்தியாகும் பாக்கியத்தை அடைந்து அவளை சேவிக்கிறாள்.

                                                                                                                                                                        தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.