அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 65)

0 26

அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் கதம்ப வனத்தில் மந்திரிநாதையை சேவிக்கும் மாதங்க கன்யகைகள் சரிதம் கண்டோம்.

இனி :சப்த சால ரக்ஷகர்கள்

ஹயக்ரீவர் : கும்பசம்பவரே!! இரும்பு முதலிய லோகங்களால் நிறுவப்பட்ட ஏழு விதமான கோட்டைகளப் பற்றி கூறினேன். இனி வேறு எதை கேட்க விரும்புகிறாய்?

அகத்தியர் : ஓ மஹா பிரக்ஞரே! அவ்வேழு கோட்டைகளை ரக்ஷிப்பவர்கள் பற்றி கூறுங்கள்.

ஹயக்ரீவர் : ஓ அகத்தியரே! இரும்பு கோட்டைக்கு அருகில் உள்ள நாநாவிருக்ஷ மஹோத்யானத்தை மஹாகாளர் மற்றும் அவரது பத்தினி மஹாகாளி காலச்சக்கரம் என்னும் ஆசனத்தில் அமர்ந்து ரக்ஷித்து வருகின்றனர்.

கல்ப வாடிகையை வஸந்த ருது நாதர் மதுஸ்ரீ, மாதவஸ்ரீ என்னும் தனது தேவியர்களுடன் புஷ்ப சிம்மாசனத்தில் அமர்ந்து ரக்ஷித்து வருகின்றனர்.

சந்தான வாடிகையை ரக்ஷிப்பவர் கிரீஷ்மருது ஆவார். ஸ்ரீலலிதையின் கிங்கரனாக இருந்து அவளது ஆக்ஞையை செய்பவர். அவருக்கு சுக்ரஸ்ரீ, சுசிஸ்ரீ என்னும் இருவர் மனைவிகளாவர்.

ஹரிசந்தனவாடிகையில் வர்ஷருது நாதர் ரக்ஷகராக விளங்குகிறார். அவருக்கு நபஸ்ரீ, நபஸ்யஸ்ரீ, ஸரஸா, ஸஸ்யமாலினி, அம்பா, துலா, நிதத்நீ, அப்ரயந்தீ, மேகயத்திகா, வர்ஷயந்தி, சுபுணிகா, வர்ஷதாரா என்னும் 12 சக்திகள் இருக்கின்றனர்.

மந்தார வாடிகையை ரக்ஷிப்பவர் சரத் ருது நாதர் ஆவார். இஷஸ்ரீ, ஊர்ஜஸ்ரீ என்னும் இரு மனைவியருடன் சதா ஸாம்ராக்ஞியை பூஜிக்கின்றார்.

பாரிஜாத வாடிகையை ரக்ஷிப்பவர் ஹேமந்தருது நாதர் ஆவார். ஸஹஸ்ரீ, ஸஹஸ்யஸ்ரீ என்னும் பத்தினிகளுடன் கூடி தம்மால் உண்டு பண்ணப் பட்ட புஷ்பங்களைக் கொண்டு தேவியை பூஜித்து கொண்டிருக்கின்றனர்.

கதம்பவாடிகையில் சீதளமான சரீரம் கொண்ட சிசிர ருது தங்கி நின்று பரிபாலித்து வருகிறார். அவ்விடத்தில் வசிப்பதாலேயே சியாமளா தேவி மிக சீதளமாய் இருக்கிறாள்.

அவர் தபஸ்ரீ, தபஸ்யஸ்ரீ என்ற தனது இரு மனைவியருடன் கூடி சதா ஸ்ரீலலிதையை அர்ச்சிக்கின்றார்.

                                                                                                                                                                        தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.