அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 66)

0 6

இதுவரை : உலோக மயமான ஏழு கோட்டைகளையும், அதன் ரக்ஷகர்கள் பற்றியும் கண்டோம்.

இனி : ரத்ன கோட்டைகளின் லக்ஷணங்கள்

ஹயக்ரீவர் : சிற்பிகளால் நிர்மாணிக்க பட்ட உலோக மயமான கோட்டைகளின் லக்ஷணங்களை உரைத்தேன். இப்போது ரத்னமயமான கோட்டைகளைப் பற்றி கூறுகிறேன். கவனியும்.

 புஷ்பராக கோட்டை தங்க கோட்டைக்கு உள்ளே ஒன்றுக்குள் ஒன்றாக சதுரச்ரமான 11 கோட்டைகள் உள்ளன. அதற்குள் இன்னும் 6 கோட்டைகள் உள்ளன.

 இங்கும் ஒரு கோட்டைக்கும் மற்றொரு கோட்டைக்கும் இடையிலான தூரம் 7 யோஜனை ஆகும்.
தங்க கோட்டைக்கும் புஷ்பராக கோட்டைக்கும் இடையே ஏழு யோஜனை தூரம் இடைவெளி உண்டு.

 இவ்வெளியில் பல சித்திகளும், சித்தர்களும், சித்த ஸ்த்ரீகளும் விளையாடுகின்றனர். மேலும் ஸ்ரீலலிதையிடம் பக்தி கொண்ட மஹா ஜனங்களை மகிழ்வித்து கொண்டு சித்த கணங்கள் வசிக்கின்றனர்.

 புஷ்பராகாதி கோட்டைகளிலும் முற்கூறிய கோட்டைகளைப் போலவே துவாரம், கோபுரம் முதலியன அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆங்குள்ள கதவுகளும், தாழ்ப்பாள்களும் பிரகாசிக்கும் புஷ்பராகத்தினாலேயே செய்யப்பட்டது.

 இனி வரும் மஹாசாலங்களில் மத்ய பிரதேசங்களிலுள்ள சகல இடங்களிலும் பக்ஷிகளும், ஓடைகளும், நதிகளும், மரங்களும் கோட்டை என்ன வர்ணமோ அதே வர்ணமாய் உள்ளது.
பத்மராக கோட்டை

 புஷ்பராக கோட்டைக்கு ஏழு யோஜனை தூரத்தில் பத்மராக கோட்டை விளங்குகிறது. அங்கு அனைத்தும் பத்மராக நிறமாகவே விளங்குகிறது.

 அங்கே அழகிய சரீரம் கொண்ட சாரணர் மற்றும் சாரண ஸ்த்ரீகளும் கல்ப விருக்ஷத்தின் அடியில் உள்ள மேடை மீது அமர்ந்து ஸ்ரீலலிதையை பற்றி பாடல்களை இனிமையாககானம் செய்கின்றனர்.

 கோமேதக கோட்டை பத்மராக கோட்டைக்கு ஏழு யோஜனை தூரத்தில் முற்கூறிய லக்ஷணங்களுடன் கூடிய கோமேதக கோட்டை விளங்குகிறது.

 அவ்விரண்டு கோட்டைக்கும் இடையில் கோடிக்கணக்கான யோகினிகளும், பைரவர்களும் வசிக்கின்றனர்.

 தேவியின் சரீரத்திலிருந்து தோன்றிய இவர்கள் அங்கு காலசங்கர்ஷிணி என்னும் தேவியை அர்ச்சிக்கின்றனர்.
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.