அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 68)

0 7

இதுவரை : அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் ரத்ன கோட்டைகளின் லக்ஷணங்களை கண்டு வருகிறோம்.

இனி : இந்திரநீலக் கோட்டை வைடூரிய கோட்டைக்கு ஏழாவது யோஜனை தூரத்தில் இந்திரநீலக் கோட்டை விளங்குகிறது.
இவ்விரு கோட்டைக்கும் இடைப்பட்ட பிரதேசமும் இந்திரநீலமயமாகவே உள்ளது. ஆங்குள்ள நதிகளும், ஓடைகளும் மிக மதுரமானவை.

பூலோகத்தில் எவர் லலிதா மந்திர சாதகர்களோ அவர்கள் தங்களது சரீரம் வீழ்ந்த பின் இந்த இந்திரநீல அங்கணத்தில் வசிப்பார்கள்.

ஓடைகளின் கரைகளிலும், நதி கூலங்களிலும், அழகிய கிருஹங்களிலும், செல்வம் நிறைந்த மணிமண்டபங்களிலும் சதா தேவியை பற்றி ஆடி, பாடி ஆனந்தம் அடைகின்றனர்.

புண்ணிய கர்மா முடிந்த பிறகு, மீண்டும் மண்ணுலகில் மானிடப் பிறவியை அடைந்து, பூர்வ ஜென்ம வாசனையால் மீண்டும் ஸ்ரீதேவியை அர்ச்சிப்பார்கள்.

அச்சிறந்த புண்ணியத்தால் மீண்டும் ஸ்ரீநகரத்தின் இந்திரநீல அங்கணத்தை அடைவார்கள்.
அவ்விடத்தின் சேர்க்கையால் ராகத்வேஷங்கள் உண்டாகி மலினமான மனோவிருத்தியுள்ள மனிதர்களாகவே ஆகின்றனர்.

ஆனால், எவர் காம, குரோதங்களையும், சுக, துக்கங்களையும் விட்டு ஜிதேந்திரியர்களாக விளங்குகின்றார்களோ அந்த ஞானிகள் சின்மய ஸ்வரூபமாகி மஹேஸ்வரியுடன் ஐக்கியமாகின்றனர்.
முத்து கோட்டை

இந்திரநீலக் கோட்டைக்கு ஏழாவது யோஜனை தூரத்தில் முற்கூறிய லக்ஷணங்களுடன் கூடிய முத்து கோட்டை இருக்கிறது.

இவ்விரு கோட்டைக்கும் இடைப்பட்ட பிரதேசம் முத்துமயமாக, சீதளமாகவும், மனோகரமாகவும் விளங்குகிறது.

தாமிரபரணி, மஹாபரணி, ஸதாமுக்தா, ஸதோதகா முதலிய மஹாநதிகள் அங்கே ஓடுகின்றன. அவற்றின் கரைகளின் மீது தேவலோக வாசிகள் முற்பிறவியில் செய்த ஸ்ரீலலிதா ஜப புண்ணியத்தால் இங்கு வந்து வசிக்கின்றனர்.

இக்கோட்டையைச் சுற்றிலும் எட்டு திக்குகளிலும் இந்திரன் முதலிய திக்பாலகர்களின் லோகங்கள் உள்ளது.

இந்திரநீலக் கோட்டை மற்றும் முத்து கோட்டை இவ்விரண்டு கோட்டைகளின் வாயிற்படிகளுக்கு இடையிலுள்ள பிரதேசத்தின் கீழ்த் திசையில் இந்திரலோகமும்,

அதற்கடுத்த மூலையில் அக்னி லோகமும், தென் திக்கில் யமலோகமும் இருக்கின்றன. யமலோகத்திற்கு மேற்கு திசையில் நிருதி ராக்ஷஸ லோகத்தில் ஸ்ரீலலிதையை அர்ச்சிக்கின்றார்.

அதற்கு வடபுறத்தில் இரண்டு வாயிற்படிகளுக்கும் நடுவில் வருண லோகம் விளங்கன் கூடி கிரீடை செய்கின்றார்கள்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.