அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 67)

0 3

இதுவரை : அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் ரத்ன கோட்டைகளின் லக்ஷணங்களை கண்டு வருகிறோம்.

இனி : வஜ்ர கோட்டைகோமேதக கோட்டைக்கு ஏழாவது யோஜனை தூரத்தில் மிக உயரமான வஜ்ரக் கோட்டை இருக்கிறது. இவ்விரு கோட்டைக்கும் இடைப்பட்ட பிரதேசமும் வஜ்ரமயமாகவே விளங்குகின்றது.

முற்பிறவியில் மஹாதேவியை பூஜித்தவர்கள் அந்த புண்ணியத்தால் ஆங்கு அப்சரஸ்களுடன் கூடி கந்தர்வர்களாகி இனிய குரலால் தேவியின் குணநலன்களை பாடிக் கொண்டிருக்கின்றனர்.
ரம்பா, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, அலம்புஸா, மஞ்சுகோஷா, ஸுகேசி, பூர்வசித்தி, கிருதாசிகை, கிருதஸ்தலா, விச்வாசீ, புஞ்சிகஸ்தலா ஆகியோரும்

தேனை உண்ட வண்டுகள் போல காமேஸ்வரியை அர்ச்சித்து கொண்டும், நடனமாடி கொண்டும் பரம ஆனந்தமாக விளங்குகின்றனர்.

வஜ்ரமயமான அந்த பூமியில் அதிகமான அலைகளோடு கரைபுரண்டு ஓடும் வஜ்ரா என்னும் நதி இருக்கிறது.

இந்த நதியின் தீர்த்தத்தை அருந்தும் பக்தர்கள் நோயற்று நீண்ட ஆயுள் கொண்டவர்களாகின்றனர்.

பண்டனால் வஜ்ராயுதத்தை இழந்த இந்திரன், இந்த நதி தீரத்தில் பக்தியுடன் தவம் செய்தான்.
அதன் பயனாக அந்த தீர்த்தத்திலிருந்து சர்வாலங்கார பூஷிதையாக தோன்றிய வஜ்ரேசி இந்திரனுக்கு வஜ்ரத்தை அளித்து மறைந்தாள்.

வைடூரிய கோட்டை

வஜ்ரக் கோட்டைக்கு ஏழாவது யோஜனை தூரத்தில் முற்கூறிய லக்ஷணங்களுடன் கூடிய வைடூரியக் கோட்டை இருக்கிறது.

இவ்விரு கோட்டைக்கும் இடைப்பட்ட பிரதேசமும் வைடூரியத்தால் நிர்மாணம் செய்யப்பட்டு மிகவும் பிரகாசமாக விளங்குகிறது.

சேஷன், கார்கோடகன், மஹாபத்மன், வாசுகி, சங்கன், தக்ஷகன், சங்கசூடன், மஹாநந்தன், மஹாபணன் முதலிய நாகர்கள்,

தர்மசீலர்களான மஹாபலி முதலிய தைத்யர்களும் கணங்களுடனும், பத்தினிகளுடன் கூடி ஸ்ரீலலிதையை ஆராதித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வைடூரிய அங்கணத்திலுள்ள நதியின் ஜலம் மிகவும் சீதளமாக இருக்கிறது.

ஓடைகளில் மதங்கொண்ட ஹம்ஸங்களும், சாரஸ பக்ஷிகளும் அழகாக விளையாடுகின்றன.

வைடூரிய மணிமயமான மாளிகைகளில் நாகர்களும், அசுரர்களும் பெண்களுடஸ்ரீலலிதோபாக்யானம்

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.