அனைத்து தோஷங்களையும் நீக்கும் பிரதோஷ வழிபாடு

0 382

பிரதோஷம் என்றால் என்ன? மாதத்தில் இருமுறை வரும் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை தரிசித்தால் நம் துன்பங்கள் அனைத்தும் விலகும்.

பிரதோஷங்களில் மொத்தம் 21 வகை பிரதோஷங்கள் உண்டு

  1. தினசரி பிரதோஷம் :

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

  1. பட்சப் பிரதோஷம் :

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்]  செய்வது உத்தமம் ஆகும்.

  1. மாதப் பிரதோஷம் :

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை]  செய்வது உத்தம பலனைத் தரும்.

  1. நட்சத்திரப் பிரதோஷம் :

பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

  1. பூரண பிரதோஷம் :

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

  1. திவ்யப் பிரதோஷம் :

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

  1. தீபப் பிரதோஷம் :

பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

  1. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :

வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர  கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும்.இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு  ஈசன் ஈடு இணையில்லா  அருள் புரிவான்.

  1. மகா பிரதோஷம் :

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.

  1. உத்தம மகா பிரதோஷம் :

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

  1. சந்திரன் – மனோ காரகன் :

சந்திரன் பலம் இழந்து ஜாதகத்தில் இருக்க , அவருக்கு சந்திர தசை நடக்கும்போது – சிலருக்கு புத்தியே பேதலித்து விடுகிறது. கோளறு பதிகம் சொல்லி ஈசனை 9 முறை தினமும் வலம் செய்யுங்கள். பின்னர்  நவ கோள்  மகிழ்ந்து நம்மை வலம் செய்திடும்  உனக்கு என்ன வேண்டும், என்ன வேண்டும் என்று கேட்கும். நவ கோள் உட்பட அண்டத்தில் உள்ள யாவும் அரனின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்குபவையே.

  1. ஏகாட்சர பிரதோஷம் :

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின்னர்  ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

  1. அர்த்தநாரி பிரதோஷம் :

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

  1. திரிகரண பிரதோஷம் :

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

  1. பிரம்மப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

  1. அட்சரப் பிரதோஷம் :

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

  1. கந்தப் பிரதோஷம் :

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

  1. சட்ஜ பிரபா பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

  1. அஷ்ட திக் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

  1. நவக்கிரகப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

  1. துத்தப் பிரதோஷம் :

 அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும். இதில் நீங்கள் ஏதேனும் ஒருவகை பிரதோஷ விருதம் கடை பிடித்தாலும், அனைத்து பிரதோஷ விருதங்களையும் கடைப்பிடித்தாலும் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று அதை சிந்தை மகிழ நீங்கள் கடைபிடித்தால் முந்தை வினைகள் அனைத்தும் நீங்கும். அஷ்ட லக்ஷ்மிகளும் உங்கள் இல்லத்தில் வாசம் செய்வார்கள்.

கஷ்டங்கள் யாவும் விலகும். அனைத்து தோஷங்களும் பிரதோஷ விருதத்தால் நீங்கும்.

விரதம் அனுஷ்டிக்கும் முறை:

 வளர்பிறை தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களில் வரும் திரயோதசி திதி அன்று அதிகாலையிலும் எழுந்து நீராடி,நித்ய கடன்களை முடிக்க வேண்டும்.சிவாலயம் சென்று வழிபட வேண்டும்.அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்கவேண்டும்.திருமுறைகள் ஒத வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிவாலயம் சென்று (சிவாயநம)ஓதி வழிபட வேண்டும்.

பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்:-

  1. பால்– நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
  2. தயிர்– பல வளமும் உண்டாகும்
  3. தேன்– இனிய சாரீரம் கிட்டும்
  4. பழங்கள்– விளைச்சல் பெருகும்
  5. பஞ்சாமிர்தம்– செல்வம் பெருகும்
  6. நெய்– முக்தி பேறு கிட்டும்
  7. இளநீர்– நல்ல மக்கட் பேறு கிட்டும்
  8. சர்க்கரை– எதிர்ப்புகள் மறையும்
  9. எண்ணெய்– சுகவாழ்வு
  10. சந்தனம்– சிறப்பான சக்திகள் பெறலாம்
  11. மலர்கள்– தெய்வ தரிசனம் கிட்டும்

 முதலில் நந்தி தேவருக்கு தீபாராதனை காட்டப்படும். பின்பு தான் மூலவரான லிங்கத்திற்கு பூஜை நடக்கும். அப்படி நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும். நமக்கு நன்மைகளே நடக்கும் என்பது நம்பிக்கை.

நந்தி ஸ்லோகம்:

நந்திகேச மஹா பாகா சிவ த்யான பராயணா

உமா சங்கர சேவார்த்தம் அனுக்ஞாம் தாது மர்ஹசி

 நந்தியின் சிறப்பு:

 பிரதோஷ காலத்தில் சிவனுடன் கூடவே அவரது வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கும்  பால்,தயிர்,சந்தனம், எண்ணெய், நெய், இளநீர், போன்றவற்றால் அபிஷேகங்கள் நடைபெறும்.பின் பூ,வில்வம் முதலியவற்றால் அர்ச்சனைகள் நடக்கும். முதலில் நந்தி தேவருக்கு தீபாராதனை காட்டப்படும். பின்பு தான் மூலவரான லிங்கத்திற்கு பூஜை நடக்கும்.அப்படி நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.நமக்கு நன்மைகளே நடக்கும் என்பது நம்பிக்கை.

நந்தி அபிஷேகத்தின் போது சொல்லும் ஸ்லோகம்:

நந்திகேச மஹா பாகா சிவ த்யான பராயணா

உமா சங்கர சேவார்த்தம் அனுக்ஞாம் தாது மர்ஹசி

பொருள்:

 சிவத்யானத்தில் சதா ஈடுபட்டுள்ள நந்தி பகவானே! நான் சிவ பார்வதி சேவை செய்ய அனுமதி அளிப்பாயாக!!  இவ்வாறு இந்த நந்தி ஸ்லோகத்தை சொல்லி வழி பட்டால் சிவனின் அருள் நமக்கு பிரதோஷகாலத்தில் கிடைக்கும்.

பிரதோஷம் மகிமை

அந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன் என்ன என்று பார்போம்;

ஞாயிறு பிரதோஷம்

சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும்.பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

திங்கள் பிரதோஷம்:

 பிரதோஷத்தில் ஸோமவரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.

செவ்வாய் பிரதோஷம்:

 செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.

பலன்செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும் , ரணமும் நீங்கும் என்பது சிவ வாக்கு.

புதன் பிரதோஷம்:

 புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.

வியாழன் பிரதோஷம்:

 குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.

வெள்ளி பிரதோஷம்:

 சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்உறவு வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

சனி மஹா பிரதோஷம்:

 சனி பிரதோஷம் என்று கூரமட்டர்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால் அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவ அருள் கிட்டும்.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.