அனுமன் – பெயர்க்கான அர்த்தம் தெரியுமா?

69

அனுமன் – பெயர்க்கான அர்த்தம் தெரியுமா?

இராமனின் தீவிர பக்தன். இந்துக்களின் கடவுள். அனுமனுக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் உண்டு. ஹனு என்றால் தாடை என்றும், மன் என்றால் பெரிதானது என்றும் பொருள்படும். ஆகையால் பெரிய தாடையை உடையவன் என்பது பொருள். அஞ்சனாதேவியின் மகன் என்பதால், ஆஞ்சநேயர் என்றும், பஞ்சபூதங்களில் ஒருவரான வாயு பகவானின் மகன் என்பதால், வாயு புத்திரன் என்றும், இராமாயணம் தவிர்த்து, மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் அனுமனைப் பற்றிய குறிப்புகள் உண்டு. தனது வாழ்நாள் முழுவதும் அனுமன் பிரம்மசரியத்தை கடைபிடித்துள்ளார்.

வாயு பகவான், அனுமனுக்கு குருவாகவும் இருந்துள்ளார். ஒன்பது விதமான இலக்கணங்களை கற்றுத் தேர்ந்ததால், நவ வியாகரண பண்டிதர் என்று அழைக்கப்படுகிறார். ஆண்மந்தி தான் அனுமன் என்றும் சொல்லப்படுகிறது