அமாவாசைக்கு சமையலில் ஏன் வாழைக்காய் பயன்படுத்துகிறோம்?

207

அமாவாசைக்கு சமையலில் ஏன் வாழைக்காய் பயன்படுத்துகிறோம்?

தை அமாவாசை நாளான இன்று காகத்திற்கு உணவு வைத்து அது சாப்பிட்டு முடித்த பின்னரே வீட்டில் உள்ளவர்கள் இலை போட்டு சாப்பிட்டு விரதத்தை முடிப்பார்கள். அப்படி நாம் வைக்கும் உணவை காகம் சாப்பிட்டால் நமது முன்னோர்கள் வந்து சாப்பிட்டு நமக்கு ஆசி வழங்கியதாக ஒரு நம்பிக்கை.

அமாவாசை நாளன்று நாம் சமைக்கும் உணவை படையிலிட்டு நம் முன்னோர்களுக்கு கொடுப்பதாக கருதி காகத்திற்கு வைத்து வருகின்றோம். அந்த படையலில் கீரை, காய்கறிகள், கிழங்கு வகைகள் இருக்க வேண்டும். அதில் மிகவும் முக்கியமானது வாழைக்காய். ஏனென்றால், முன்னோர்களின் அருளால், நம் குலமும், சந்த திகளும் வாழையடி, வாழையாக தழைக்க வேண்டும் என்பதற்ஆக வாழைக்காயை கண்டிப்பாக சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள்.

முன்னோர்கள் இறந்த தேதி, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் வழிபாட்டின் போது காகத்திற்கு உணவளிக்கப்படுகிறது. அப்படி செய்த பின்னரே வீட்டிலுள்ளவர்கள் இலை போட்டு விரதமிடும் பழக்கம் காலங்காலமாக நடைமுறையில் உள்ளது. காகத்திற்கு தினந்தோறும் சாப்பாடு வைக்கும் போது பித்ருக்களின் ஆசி கிடைக்கிறது.

முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து தர்ப்பணம் செய்வதன் மூலமாக செய்வினை கோளாறு நீங்கும், கடன் பிரச்சனை தீரும் என்பது ஐதீகம். எமனும் சனியும் சகோதர்ர்கள் என்பதால், காக்கைக்கு உணவளிப்பதன் மூலமாக இருவரும் திருப்தி அடைந்த தாக ஐதீகம் என்று சொல்லப்படுகிறது.

சனீஸ்வர பகவானின் வாகனம் காகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. காகமானது எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவனான காகத்திற்கும் சாதம் வைத்து வழிபட நமது முன்னோர்கள் சாந்தமடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.