அவமானங்களை நீக்கும் அண்ணாமலை கிரிவலம்!

48

அவமானங்களை நீக்கும் அண்ணாமலை கிரிவலம்!

உங்களது வாழ்க்கையில் இது போன்று நடந்து இருந்தாலோ, நடைபெற்றுக் கொண்டிருந்தாலோ இந்த அபூர்வமான கிரிவலம் செல்ல வேண்டியது அவசியம் ஆகும்.

முறையற்ற எண்ணங்கள் அடிக்கடி மனதில் உருவாகுதல்

கொடுமையான காம தீய செயல்களை பிறருக்கு செய்தல்

செய்யக்கூடிய எண்ணங்கள் வருதல்

செய்வதை தடுக்காமல் இருத்தல்

தீரவே தீராத கெட்ட பழக்கவழக்கங்களால் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் பல்வேறு விதங்களில் கஷ்டப்படுதல்

பல ஆண்டுகளாக தீராத பகை இருந்து அதன் மூலமாக நிம்மதி இல்லாத தினசரி வாழ்க்கையை பல ஆண்டுகளாக அனுபவித்தல்

கடந்த 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் அல்லது 15 ஆண்டுகள் அல்லது 30 ஆண்டுகளாக மற்றவர்களால் அவமானப்பட்டு கொண்டே இருத்தல்

கணவன் மனைவி என்ற குடும்பத்திற்குள் மூன்றாம் நபரின் தலையீட்டால் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை

இவை அனைத்தும் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்று மட்டும் இருந்தால் இந்த கிரிவல முறை உங்களுக்காக அகத்தியரின் அருளால் அருளப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் வரும் எந்த செவ்வாய் கிழமை அன்றும் கிரிவலம் ஆரம்பிக்கலாம்.

ஒன்பது செவ்வாய்கிழமைகள் செல்ல வேண்டும் தொடர்ந்து அடுத்தடுத்து செவ்வாய் கிழமைகளில் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

ஒரு ஆண்டிற்குள் இவ்வாறு செல்ல வேண்டும். எல்லா நாட்களிலும் இரட்டை பிள்ளையார் கோயிலிலிருந்து அண்ணாமலை கிரிவலம் துவங்கும்.

14 கிலோமீட்டர் வெறும் கால்களால் நடந்து செல்ல வேண்டும்.

ஒருபோதும் செருப்பு அணியக்  அணியக்கூடாது.

காலில் அல்லது கால்களில் நோய் உள்ளவர்கள்  சாக்ஸ் அணிந்து கொள்ளலாம். பூத நாராயண பெருமாள் கோயிலில் அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.

ஆனால் இந்த அவமானங்களை நீக்கும் கிரிவலத்தை அக்னி லிங்கத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும். செவ்வாய்க்கிழமைகளுள் ஒன்றில் அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது மதியம் ஒரு மணிக்கு மேல் இரண்டு மணிக்குள் அப்படியும் இல்லையென்றால் இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் அக்னி லிங்கத்தில் இருந்து கிரிவலத்தை ஆரம்பிக்க வேண்டும்.

காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கிரிவலம் ஆரம்பிப்பவர்கள் மதியம் ஒரு மணிக்கு மேல் இரண்டு மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் அதே அக்னி லிங்கம் இருக்கும் சன்னதியில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.

மதியம் ஒரு மணிக்கு மேல் இரண்டு மணிக்குள் அண்ணாமலை கிரிவலம் ஆரம்பிப்பவர்கள் இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் அளவில் நள்ளிரவு 3 மணிக்கு மேல் 6 மணிக்குள் அதை அக்னி லிங்கம் இருக்கும் சன்னதியில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.

இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் அக்னி லிங்கத்தில் கிரிவலத்தை ஆரம்பிப்பவர்கள் அன்று நள்ளிரவு மூணு மணிக்கு மேல் நாலு மணிக்குள் அதை அக்னி லிங்கத்தில் கிரிவலத்தில் முடிக்க வேண்டும் .

இரவு நேரத்தில் சீக்கிரம் கிரிவலம் நிறைவாகிவிடும். அப்படி சீக்கிரம் வந்தாலும் கூட நள்ளிரவு மூணு மணிக்கு மேல் நாலு மணி வரை அக்னி லிங்கம் இருக்கும் பகுதியில் சில நிமிடங்கள் ஆவது காத்துக் கொண்டிருக்க வேண்டும் .

அப்பொழுது அக்னி லிங்கத்திடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இந்த கிரிவலம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை “அக்னி பத பாத ஜோதியே போற்றி போற்றி” என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருவரும் செல்ல வேண்டும்.  “அக்னி பதபாதாய  நமக” என்று ஜெபிப்பது கிரிவலம் செல்ல வேண்டும்.