ஆடிப்பூரம்: அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி!

76

ஆடிப்பூரம்: அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி!

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெறும். ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு உகந்த மாதம். அந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அந்த வகையில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆடி 26 ஆம் தேதி ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது.

வளைகாப்பு நிகழ்ச்சி:

இந்த அற்புத நாளில் அம்மனுக்கு வளையல் சாற்றி வழிபாடு செய்தால் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பூரம் நாளில், அம்மனுக்கு மஞ்சள் காப்பு, குங்குமக் காப்பு, சந்தனக்காப்பு நடைபெறும். மேலும், சிறப்பு பெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.

அம்மனுக்கு நடக்கும் வளைகாப்பு நிகழ்ச்சி வளையல் வாங்கிக் கொடுப்பதன் மூலமாக அனைத்து நன்மைகளும் பெறலாம். செல்வ, செழிப்பான வாழ்க்கை உங்களை வந்தடையும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

குழந்தை பாக்கியம்:

ஆடிப்பூரம் நாளில், குழந்தை இல்லாத தம்பதியினருக்கு வீட்டில் நலங்கு வைத்து அம்மனை வழிபட்டால் அடுத்த ஆண்டே குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். அதாவது, குழந்தை இல்லாத தம்பதியினருக்கு சந்தனம், குங்குமம் வைத்து பெண்ணிற்கு இரு கைகளிலும் வளையல் போட்டு முறைப்படி எப்படி வளைகாப்பு செய்வார்களோ அதன்படி, செய்தால் அடுத்த வருடமே வீட்டில் குவா குவா சத்தம் அதான் குழந்தை பிறக்கும் என்பது மக்களின் நம்பப்படும் ஐதீகம்.

கோயிலுக்கு செல்வது மட்டுமின்றி வீட்டிலும் அம்மனுக்கு வளையல் மாலை போட்டு அம்மனை வழிபட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.