ஆடை தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

79

ஆடை தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

ஏழை, பணக்காரன் என்று யாராக இருந்தாலும் அவர்களது தகுதிக்கு ஏற்ப தானம், தர்மங்கள் செய்தால், அவர்களது பாவ புண்ணியங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அந்த வகையில், ஆடை தானம் செய்தால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது குறித்து இன்றைய பதிவில், பார்க்கப் போகிறோம்.

கரையில்லாத வஸ்திரம் ஆடையை அணியக் கூடாது. கரையுள்ள ஆசையை மட்டுமே அணிய வேண்டும். ஸ்நானம் செய்து முடித்த உடன் நாம் கட்டியிருக்கும் ஆடையை கீழே போட்ட பிறகு அதனை கால்களால் மிதிக்கவோ அல்லது எடுக்கவோ கூடாது.

காரணம் என்னவென்றால், தேவதைகள் அனைவரும் ஆடையில் குடியிருப்பார்கள். வேத சாஸ்திரத்தில் வஸ்திரம் செய்யும் முறை, வஸ்திரத்தில் தேவதைகள் எப்படி குடி புகுவார்கள் என்பது பற்றியெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. கரையுள்ள வஸ்திரத்தை யாருக்காவது தானமாக கொடுத்தால் அவர்கள் பல தலைமுறைகள் நீடுழி வாழ வேண்டும் என்று நினைப்பதற்குச் சமம்.

அதே போன்று யார் கொடுத்தார்களோ அவர்களும் பல தலைமுறைகள் நீடுழி வாழ வேண்டும் என்று சங்கல்பம் ஆகும். இதனால், தான் கரையுள்ள ஆடையை தர வேண்டும் என்கிறார்கள். துணி நெய்யும் நெசவுக் கலையின் மூலமாகவும், நெசவாளிகள் மூலமாகவும் நாம் பல தத்துவ விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். அது என்னவென்றால், ஆணிலும் பெண்மை உண்டு, பெண்ணிலும் ஆண் உண்டு என்பது தான். வேட்டியாக இருந்தாலும் சரி, புடவையாக இருந்தாலும் சரி அவை இரண்டிலும் குறுக்கு நெடுக்கில் குட்டையான குறிக்கிழையும், நீண்ட நெடுக்கிழையும் உண்டு.

இதற்கு நேரிழை என்று பெயர். நேரிழை என்றால் பெண் என்று பெயருண்டு. ஆடையில் இருக்கும் நீனட் நூலிழை பெண். அதில் குறுக்கே இருக்கும் நூலிழை ஆண். அதனால், தான் இல்லற வாழ்க்கையில் பெண்ணிற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

ஆணையும், பெண்ணையும் சேர்த்து நெசவு நெய்தது தான் இல்லற வாழ்க்கை. அதற்கு உதாரணம் வேஷ்டி புடவை உள்ளிட்ட ஆடைகள். அதனால், தான் விழா காலங்களில், பண்டிகை நாட்களில் ஒருவருக்கொருவர் வேஷ்டி வைத்தும், புடவை வைத்தும் தருகிறார்கள். குறைந்தது ஒரு ரவிக்கை பிட்டுத்துணியாவது தருவது வழக்கம்.

இதனால், தான் வஸ்திர தானம் செய்யச் சொல்கிறார்கள். இதனால், பல தலைமுறைகள் நீடுழி வாழலாம் என்பது ஐதீகம்.