ஆபத்து நேரத்தில் யாரை அழைக்க வேண்டும்?

213

ஆபத்து நேரத்தில் யாரை அழைக்க வேண்டும்?

ஒரு கிராமத்தில் ஒருவன் கிணற்றின் மேல் பகுதியில் சுவரில் நல்ல தூங்கி கொண்டு இருந்தான். கிணற்றின் வலதுபுறம் விழுந்தால் தரையில் விழுவான். இடது பக்கம் விழுந்தால் தண்ணீர் நிறைந்த கிணற்றுக்குள்  விழுந்து விடுவான். இதை பார்த்து கொண்டு இருந்த பார்வதி, எம்பெருமானே அவன் கிணற்றின் மேல் பகுதியில் தூங்கி கொண்டு இருக்கிறன் தண்ணீரில் விழுந்தால் இறந்துவிடுவான்.

அவனை காப்பாற்ற வேண்டும் என்று சிவனிடம் கூறினாள். தாயே அவனுக்கு விதி முடிந்து விட்டது. அவனை காப்பாற்ற முடியாது என்றார் சிவன். எம்பெருமான் நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக காப்பாற்ற முடியும் என்றாள் பார்வதி தேவி. சரி தாயே…

அப்படி என்றால் நாம் இருவருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம். சரியா? என்றார் சிவபெருமான். பார்வதியும் சம்மதம் தெரிவித்தார். அந்த மானிடான் தண்ணீரில் விழும்போது அம்மா என்றால் பார்வதி தாயே நீங்கள் காப்பாற்ற வேண்டும் என்றார் சிவன். அப்பா என்றால் நான் போய் காப்பாற்றி விடுகிறேன் என்றார் சிவன்.

பார்வதியும் சரி என்று சம்மதம் தெரிவித்தார். இரண்டு பேரும் பார்த்து கொண்டே இருக்கிறார்கள். அந்த மானிடான் தூக்கத்தில் கிணற்றுக்குள் விழும்போது அம்மா என்றும் சொல்ல வில்லை, அப்பா என்றும் சொல்ல வில்லை. நான் செத்தான்ட…….! என்று சொல்லி கொண்டே கிணற்றுக்குள் விழுந்து இறந்து விட்டார்.

பார்வதி எம்பெருமானே என்னை மன்னித்து விடுங்கள் என்றாள். இல்லை தாயே. அவன் விதி முடிந்து விட்டது அவ்வளவு தான் தாயே! என்றார் சிவன். இதில் இருந்து என்ன தெரியுது உங்களுக்கு. உங்களுக்கு ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் ஒன்று அப்பா என்னை காப்பாற்று என்று சொல்லுங்க, இல்லையென்றால் அம்மா என்னை காப்பாற்று என்று சொல்லுங்கள்..இல்லையென்றால் உங்களது குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை சொல்ல வேண்டும். அப்படி சொல்வதன் மூலமாக கண்டிப்பாக உங்களை காப்பாற்ற வருவார்கள்.