ஆயுத பூஜையை பற்றி அறிவோம்!

80

ஆயுத பூஜையை பற்றி அறிவோம்!

கல்வி கடவுளான சரஸ்வதி தேவி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர்கள் ஆயகலைகள் அனைத்தினையும் அறிந்திட முடியும் என்பதே உண்மை ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் அன்னை பராசக்தியை வீடுகளிலும், ஆலயங்களிலும் பூஜை செய்து வழிபடுவார்கள்.

நவராத்திரி கொண்டாட்டத்தின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியன. இந்த நாட்களில் தமிழகத்திலுள்ள எல்லா சரஸ்வதி தேவி கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கூத்தனூர் சரஸ்வதி கோயில், வேதாரண்யத்தில் வீணையில்லாத சரஸ்வதி, கண்டியூர், உத்திர மேரூர், காஞ்சிபுரம் காமாட்சி, மதுரை மீனாட்சி, லால்குடி, தஞ்சை பெரிய கோயில் கங்கை கொண்ட சோழபுரம், திருப்பூந்துருத்தி, போளூர், நாகூர், சோமநாதபுரம் கேசவர், ஹளபேடு ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

Also Read This: ஸ்ரீ சரஸ்வதி தேவி 108 போற்றி!

கூத்தனூரில் அம்மனின் பாதங்களில் பக்தர்கள் மலரிட்டு வணங்கி அருளைப்பெற ஏதுவாக சரஸ்வதி பூஜையன்று அம்மனின் கால்கள் அர்த்த மண்டபம் வரை நீட்டி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள்.

சரஸ்வதி பூஜை: நவராத்திரி பண்டிகை நாளில் ஒன்பது நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை நாளாகும்.

ஆயுத பூஜை கொண்டாடும் முறை:

ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள் புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள்.

இதையும் படியுங்கள்: கலைமகள் ஏன் அன்னப்பறவை வாகனத்தில் வீற்றிருக்கிறாள்?

இந்த நாளே ஆயுத பூஜை மஹா நவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. பூஜையில் நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், கலந்த சாதம் பாயசம், வடை, சுண்டல், அவல் பொரி கடலை என செய்வது சம்பிரதாயம். வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கிழங்கு, உங்களால் முடிந்த பழம், முடிந்தால் தேங்காய் உடைத்து நைவேத்தியம் செய்யுங்கள்.

நினைவில் கொள்ளுங்கள்: பழங்களோ மிக உயர்ந்த நைவேத்தியம். ஏனெனில் பழங்கள் மிகவும் சுத்தமானது. வேண்டிய நாளன்று தேங்காய் உடைக்கலாம். தேங்காய் உடைத்து வழிபடுவது மன கஷ்டங்களை உடைக்கும் என்ற தொரு நம்பிக்கை உண்டு. சுத்தமான நீர் கொண்டு நைவேத்தியங்களை மூன்று முறை சுற்றி தரையில் நீரை விட்டு விடுங்கள். ஆரத்தி எடுப்பதில் நெய் தீபம் கொண்டு தீப ஆரத்தி செய்யலாம்.

மேலும் படிக்க: சரஸ்வதி, ஆயுத பூஜை: வழிபடும் முறை, பூஜை செய்ய உகந்த நேரம் எப்போது?

மாலையில் சுத்தமான தட்டில் நீர் விட்டு சுண்ணாம்பு, மஞ்சள் கலந்து ஆரத்தி எடுத்து வாசலில் கோலத்தின் மேல் விட்டு விடலாம். முடிந்தவரை அரிசி மாவு கோலமே போடுங்கள். ஒரு கொத்து மாவிலையினை வீட்டின் முனைப்பில் தொங்க விடுவது வீட்டின் பண்டிகையினைக் குறிக்கும். அது போலத்தான் கோலத்தில் செம்மண் இடுவதும் வீட்டின் விசேசத்தினைக் குறிக்கும்.

அறுபத்து நான்கு கலைகள்:

கல்வி கடவுளான சரஸ்வதி தேவி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர்கள் ஆயகலைகள் அனைத்தினையும் அறிந்திட முடியும் என்பதே உண்மை.

சரஸ்வதி தேவியின் பெயர்கள்:

சரஸ்வதிக்கு நாற்பதுக்கும் அதிகமான பெயர்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான பெயர்கள். கலைமகள், ஞானவாகினி, தூயாள், பிராமி, இசை மடந்தை, காயத்ரி, சாரதா, வெண்டாமரையாள், ஞானக்கொழுந்து, ஆதிகாரணி, சகலகலாவல்லி, வாணி, பனுவலாட்டி, பாமகள், பாமுதல்வி, பாரதி, நாமகள், பூரவாகினி, சாவித்ரி, ஞான அமிலி நாமகள், கலை மங்கை, வாணி, கலை வாணி, பார்கவி, சரஸ்வதி, பாரதி, சாரதா, சகலகலா வல்லி, பிரம்மதேவி, வேத நாயகி, ராஜ மாதங்கி, நீலதாரா, சித்ர தாரா, சியாமளா, ராஜ சியாமளா, வாக்வாதினி, வாகதீஸ்வரி, நயவுரை நாயகி, ஞான ரூபிணி, வித்யா வித்யா தாரணி ஆகியன ஆகும்.