இதெல்லாம் நடந்தால் உங்களுக்கு பணம் வரும்!

60

இதெல்லாம் நடந்தால் உங்களுக்கு பணம் வரும்!

பொதுவாக நாம் வெளியில் செல்லும் பூனை உள்ளிட்டவை எதிரே வந்தால் அதனை அபசகுனம் என்று சொல்வோம். ஆனால், உண்மையில் அதற்கு அது அர்த்தமில்லை. நம் முன்னோர்கள் வெளியூருக்கு செல்லும் போது இரவு நேரங்களில் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு வெளியில் செல்வார்கள். அப்போது, இரவு நேரங்களில் பூனையோ அல்லது வேறு ஏதேனும் காட்டு விலங்குகளோ எதிரே வந்தால், அந்த விலங்குகள் நமது கண்களுக்கு தெரியாது.

மாறாக அவற்றின் கண்கள் தான் தெரியும். ஆதலால், எதிரே வருவது பூனையா அல்லது புலி, கருஞ்சிறுத்தை போன்ற காட்டு விலங்குகளா என்பது தெரியாது. மேலும், இவைகளைக் கண்டால் மாடு மிரளும் என்பதற்காக வண்டியை ஓரங்கட்டிவிட்டு சிறிது நேரம் கழித்து புறப்பட்டு செல்வார்கள். இந்தப் பழக்கமே நாளடைவில் பூனை குறுக்கே சென்றால் அபசகுனம் என்று பார்க்கும் ஒரு வழக்கமாக மாறிவிட்டது.

இது ஒரு புறம் இருக்கட்டும். நாம், இந்தப் பதிவில் இதையெல்லாம் நாம் கண்டால் அன்றைய நாளில் நமக்கு பணம் வரும் என்பது அர்த்தம். அப்படி என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்…

தேங்காய், வாத்து:

காலையில் எழுந்தவுடன் தேங்காயையோ அல்லது வெள்ளை நிற வாத்தையோ கண்டால் அது ஏதோ ஒரு வழியில் பண வரவை குறிப்பதாக அர்த்தமாம்.

வெள்ளைப் பசு:

உங்கள் வீட்டருகில் வெள்ளை நிற பசு ஒன்று மேய்ந்து கொண்டிருப்பதை நீங்கள் கண்டால் அது பண வரவைக் காட்டும் ஒரு நல்ல சகுனமே தவிர, அதனால், நீங்கள் எரிச்சல் அடைய வேண்டாம்.

சகுனம்:

நீங்கள் வெளியில் செல்லும் வழியில் உங்களுக்கு எதிரே நாய், குரங்கு, பாம்பு அல்லது ஏதேனும் பறவையோ வந்தால், நீங்கள் விரைவிலே பணக்காரராக மாறப்போகிறீர்கள் என்று அர்த்தம்.

சுற்றுச்சூழல்:

உங்களது கனவில் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று இருக்கும் பசுமையாக காட்சிகள் வந்தால் அது நீங்கள் விரைவில் செல்வந்தராக வருவதற்கான அறிகுறியாகும்.

பால், தயிர்:

பால், தயிர் போன்ற பால் பொருட்களை அதிகாலையில் கண்டால் அது உங்களிடம் பணம் வருவதற்கான சகுனத்தை காட்டுகிறது.

இசை:

நீங்கள் காலையில் எழுந்தவுடன் நாதஸ்வர இசை, கோயில் மணி, பஜனைகள், பக்திப் பாடல்கள் ஆகியவற்றைக் கேட்டால் பண வரவுடன் கூடிய நல்ல அதிர்ஷ்டமும் தேடி வரப் போகிறது என்று அர்த்தம்.

கரும்பு:

நீங்கள் வேலைக்கு செல்லும் போதோ அல்லது நடை பயிற்சி மேற்கொள்ளும் போதோ கரும்பைப் பார்த்தால் உங்களது பண வரவு அமையப் போகிறது என்பது அர்த்தம்.

சுமங்கலிப் பெண்:

நீங்கள் வெளியில் செல்லும் வழியில் உங்களுக்கு எதிரில் சுமங்கலிப் பெண் வந்தால் ஏராளமான பணம் கிடைக்கப் போகிறது என்பது அர்த்தம்.

வீட்டிற்கு நாய் வந்தால்:

நாயானது வாழ்க்கையில் மகிழ்ச்சியின் சின்னமாகும். புகலிடம் தேடி நாய்க்குட்டியோ அல்லது நாயோ வீட்டிற்கு வந்தால் உங்களுக்கு பேர், புகழ், அந்தஸ்து, கௌரவம் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.

மழை – வெயில்:

ஒரு சில நேரங்களில் இயற்கையின் மாற்றம் காரணமாக ஒரே நேரத்தில் மழையும், வெயிலும் ஒரே நேரத்தில் நிகழ்வதைக் கண்டால், செல்வம் மற்றும் அதிர்ஷ்டம் இரண்டும் ஒரே நேரத்தில் வீடு தேடி வந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

தோட்டத்து உயிரினங்கள்:

மழை பெய்து நின்ற பிறகு தவளையோ அல்லது தோட்டத்தில் இருக்கும் வெட்டுக்கிளியோ உங்களது வீட்டுக்குள் வந்தால் அது உங்களுக்கு அதிர்ஷ்டம் வரப் போகிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது என்று அர்த்தம். அதனால், அதனை விரட்டியடிக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட சின்னத்தை பார்த்தால்:

தங்க காசு, குதிரை குளம்பு, 4 இலைகளைக் கொண்ட க்ளோவர் தாவரம் ஆகியவற்றைப் பார்த்தால் அதிர்ஷ்டமும், லாபமும் வரப் போகிறது என்று அர்த்தம்.

ஆடைகளை மாற்றி அணிந்தால்:

ஏதாவது ஒரு நேரத்தில் தவறுதலாக ஆடைகளை நாம் மாற்றி அணிந்து கொள்வோம். அதன் பிறகு அதனை திருப்பி சரி செய்து கொள்வோம். அதனை நீங்கள் தெரியாமல் செய்திருந்தால் அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் பொருள் வரவையும் கொடுப்பதற்கான அறிகுறி.

சிலந்தி வலையில் பெயரின் முதல் எழுத்து:

சிலந்தி வலை கட்டும் போது அதனை உற்றுப் பார்க்கும் போது அதில் உங்களது பெயரில் முதல் எழுத்து தெரிந்தால் உண்மையில் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப் போகிறது என்று அர்த்தம்.

பறவை எச்சம்:

நாம், ஏதாவது ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கும் போது காகமோ அல்லது ஏதோ பறவையோ நமது தலையிலோ அல்லது சட்டையிலோ எச்சம் போட்டுவிடும். அப்போது தெரிந்தோ, தெரியாமலோ பணக்காரனாகப் போகிறாய் என்று விளையாட்டாக சொல்வதுண்டு. உண்மையில் அதற்கு அது தான் அர்த்தம் என்று இப்பொழுது தான் தெரிகிறது. ஆம், அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது என்பதற்கான அறிகுறிதான் அது.

அதிர்ஷ்ட நாள்:

ஜாதகத்தில், இன்றைய நாள் ராசி பலன், வார ராசி பலன், மாத ராசி பலன் என்று ஒவ்வொரு ராசிக்கும் அதற்குரிய பலன்களை சொல்லும் போது கூடவே இந்த தேதியில் பண வரும். இந்த தேதி உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள் என்று குறிப்பிட்டிருப்பார்கள். அது போன்ற உங்களுக்கு அதிர்ஷ்டமான நாட்களில் பணம் வந்தால் உங்களுக்கு பண வரவு இருந்து கொண்டே இருக்கும் என்பது அர்த்தம்.

வீட்டிற்குள் வௌவால் வந்தால்:

செல்வத்தின் சின்னமாக வௌவால் இருப்பதாக சீனர்கள் கருதுகின்றனர். இந்து முறைப்படி அது துர்திர்ஷ்டம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில், வௌவால் வீட்டிற்குள் கூடு கட்டினால், செல்வராக வரப்போகிறீர்கள் என்று அர்த்தம்.