இந்த பிறவியில் செய்த பாவங்கள் நீங்க மகாசிவராத்திரி விரதம்!

164

இந்த பிறவியில் செய்த பாவங்கள் நீங்க மகாசிவராத்திரி விரதம்!

மும்மூர்த்திகளில் ஒருவர் சிவபெருமான். சைவ சமயத்தின் முழு முதல் கடவுள். பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருள் என்பதால், பரமசிவன் என்று அழைக்கப்படுகிறார். சிவன் என்பதற்கு சிவந்தவன் என்றும், வடமொழியில் சிவம் என்பதற்கு முழுமையானது, மங்களகரமானது என்று பொருள் உண்டு.

சைவர்கள் சிவபெருமானுக்கு 8 வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். மேலும், இந்த 8 வகையான விரதங்களை வழிபடுவதன் மூலமாக சிவனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது சைவர்களின் நம்பிக்கை.

சிவனுக்குரிய 9 விரதங்கள்:

  1. பிரதோஷ விரதம்
  2. சோமவார விரதம்
  3. உமா மகேஸ்வர விரதம்
  4. திருவாதிரை விரதம்
  5. மகாசிவராத்திரி விரதம்
  6. கல்யாண விரதம் (கல்யாண சுந்தரர், கல்யாண சுந்தர விரதம்)
  7. பாசுபத விரதம்
  8. அஷ்டமி விரதம்
  9. கேதாரகௌரி விரதம்

இந்த 9 முக்கியமான விரதங்களை ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம். தற்போது சிவனுக்குரிய முக்கிய விரதமான மகாசிவராத்திரி விரதம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

மகாசிவராத்திரி விரதம்:

மகாசிவராத்திரி விரதம் மாசி மாதம் பௌர்ணமி முடிந்த 14 ஆம் நாளான தேய்பிறை சதுர்த்தசி அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் கடைபிடிக்கும் போது சிவராத்திரிக்கு முதல் நாள் மட்டும் ஒருவேளை சாப்பிட்டு சிவராத்திரி அன்று முழுவதும் சாப்பிடாமல் இருக்கின்றனர்.

சிவராத்திரி அன்று காலையில் குளித்து முடித்து சிவாலய வழிபாடு செய்து அன்று முழுவதும் இறைவனின் சிந்தனையில் இருக்க வேண்டும். இரவில் நடக்கும் 4 கால சிவ வழிபாட்டில் கலந்து கொண்டு தேவாரம், திருவாசம் உள்ளிட்ட 12 திருமுறைகள் பாட வேண்டும். மறுநாள் சிவாலய சென்று தரிசனம் செய்து பின், சிவனடியார்களுடன் உணவருந்தி விரதத்தினை நிறைவு செய்கின்றனர்.

மகாசிவராத்திரி விரதம் கடைபிடிப்பதால், இந்தப் பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி, நல்வாழ்க்கை பெறுவதோடு சிவன் அருளால் முக்தியும் கிடைக்கப் பெறும். இந்த விரதம் இருக்கும் போது தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சந்திரசேகரர், சோமஸ்கந்தர் ஆகியோரை வழிபட வேண்டும்.

ஓம் நம சிவாய

தென்னாடுடைய சிவனே போற்றி…

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…