இன்று நவராத்திரி 6ஆவது நாள்: காத்யாயினி தேவி வழிபாடு!

83

இன்று நவராத்திரி 6ஆவது நாள்: காத்யாயினி தேவி வழிபாடு!

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் இந்த நவராத்திரி விரதம். நவராத்திரி என்றாலே 9 இரவுகள். நவம் என்பது 9ஐ குறிக்கும். இதற்கு மற்றொரு பொருளும் இருக்கிறது. அதாவது நவம் என்றால் புதுமை.

இந்த 9 இரவுகளில் சக்தியின் மகா ரூபமான துர்கா தேவியை 9 விதமான வடிவங்களில் தரிசித்து நோன்பு இருந்து பூஜை செய்யப்படுகிறது. தேவி சக்தியை நினைத்து அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று தான் இந்த நவராத்திரி நோன்பு (விரதம்).

ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியை போற்றும் விரதமாக இந்த நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது மனிதனுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படக் கூடிய ஆற்றலைக் கொடுக்கிறது.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு பின் வரும் பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை உள்ள காலகட்டத்தில் கொண்டாடப்படுவது. புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை 9 நாளும் சாரதா நவராத்திரி விரதமாகும்.

பிரம்மச்சாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, சைலபுத்ரி, காத்யாயினி, ஸ்கந்தமாதா, மகாகௌரி, சித்திதாத்திரி, காளராத்திரி ஆகிய 9 தேவிகளையும் இந்த 9 நவராத்திரி நாட்கள் பூஜித்து வழிபடுவது. நவராத்திரி நிறைவு பெறும் நாளாக விஜயதசமி அன்று தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. தசரா திருவிழா வட இந்தியாவில் அதிகளவில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.

அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 7ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி வரும் 15 மற்றும் 16ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியுடன் இந்த நவராத்திரி நோன்பு நிறைவடைகிறது. சரி, நவராத்திரியின் போது வழிபடும் 9 தேவிகள் குறித்து இந்தப் பதிவில் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம்.

சரி, இந்தப் பதிவில், நவராத்தியின் 6ஆவது நாளான இன்று துர்க்கையின் 6ஆவது அம்சமான காத்யாயினி தேவியை வழிபாடு செய்கின்றனர். ஒரு காலத்தில் காதா என்ற முனிவருக்கு காதயா என்ற மகன் இருந்தான். கதா முனி கடும் தவம் செய்து துர்க்கையை மகளாக பெற்றார். அதனால், காத்யாயினி என்று பெயர் பெற்றாள். இவளை மகிஷாசுர மர்த்தினி என்றும் கூறுவர்.

காத்யாயினி தேவியை மக்கள் தங்களது மகளாக நினைத்து வழிபாடு செய்கின்றனர். இவளுக்கு அன்பு அதிகம். அப்படியிருந்தும் தீய சக்திகளை அழிப்பாள். தன்னை நம்பி வரும் பக்தர்களின் துயரங்களை நீக்குபவள். தனது 4 கரங்களில் ஒரு கரத்தில் தாமரை மலரை ஏந்தியும், மற்றொரு கரத்தில் ஒளி வீசும் வாள் ஏந்தியும் காணப்படுகிறாள். இரண்டு கைகள் பக்தர்களுக்கு அபயம் தரும் வகையில் உள்ளன.

காத்யாயினி தேவியின் தியான மந்திரம்:

சந்திர ஹசூஜ் வல்கார லவர் வாஹன் காத்யாயனி சுப் தத்யா தேவி தவன் தாதினி

சிம்ம வாகனத்தில் காட்சி தரும் காத்யாயினி தீய சக்திகளை அழிக்கும் குணம் கொண்டவளாக வாள் ஏந்தி கம்பீரமாக காட்சி தரும் அன்னை காத்யாயினி எனக்கு அருள் செய்ய வேண்டும்.

டெல்லியில் சட்டர்பூர் பகுதியிலும், தமிழகத்தில் தஞ்சை பகுதியிலும் காத்யாயினி கோயில்கள் அமைந்துள்ளன.