இரட்டை குழந்தைகளை கனவில் கண்டால் கெடுதல் நடக்குமா?

109

இரட்டை குழந்தைகளை கனவில் கண்டால் கெடுதல் நடக்குமா?

கனவில் தோன்றும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. அதை வைத்து நல்லது நடக்கப் போகிறதா? இல்லை கெடுதல் நடக்கப் போகிறதா? என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை தயார்படுத்திக் கொள்ளலாம்.

 1. சிறிய குழந்தையை கனவில் கண்டால், நோய் நீங்கும் என்பது அர்த்தம்.
 2. குழந்தை பிறப்பது போன்று கனவு வந்தால், நீங்கள் வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு பணிகளில் உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது பொருள்.
 3. பிறந்த குழந்தையை நீங்கள் கனவில் கண்டால், சுப செய்திகள் வருவதோடு, நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்று அர்த்தம்.
 4. பெண் குழந்தை பிறப்பது போன்று கனவு கண்டால், நீங்கள் உயர்ந்த இடத்திற்கு செல்லப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
 5. ஆண் குழந்தை பிறப்பது போன்று கனவு கண்டால், உங்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள் வந்து சேரும். இதன் மூலம் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.
 6. வயதான பெண் குழந்தையை குளிக்க வைப்பது போன்று கனவு வந்தால், நற்பெயர் உண்டாகும் என்பது அர்த்தம்.
 7. இதுவே இரட்டை குழந்தைகளை கனவில் கண்டால், புதிய வாய்ப்பு உண்டாகி, அதன் மூலமாக முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதை குறிக்கிறது.
 8. குழந்தை உங்களுக்கு மலர்க்கொத்து கொடுப்பது போன்று கனவு வந்தால், உங்களது காதல், எந்தவித பிரச்சனையும் இல்லாமல் திருமணத்தில் முடியும் என்பது அர்த்தம்.
 9. குழந்தை அழுது கொண்டிருப்பது போன்று கனவு வந்தால், திட்டமிட்டு கொண்டிருக்கும் விஷயங்களில் ஏதோ குழப்பங்கள் ஏற்படப் போகிறது என்று அர்த்தம். உடல் நலக் குறைவு ஏற்படும்.
 10. குழந்தை அழுக்கு படிந்து இருப்பது போன்று கனவு கண்டால், உங்களது வாய்ப்பை நீங்கள் சரியாக பயன்படுத்தவில்லை. மாறாக தாமதம் செய்து வருகிறீர்கள் என்று அர்த்தம்.
 11. குழந்தையை தாய் குளிக்க வைப்பது போன்று கனவு வந்தால், உங்களுக்கு வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும் என்பது பொருள்.
 12. விபத்து ஏற்படுவது போன்று கனவு தோன்றினால், தன அபிவிருத்தி உண்டாகும். கத்தி அல்லது துப்பாக்கியால் சுடப்பட்டது போன்று கனவு கண்டால் அது தங்களுக்கு நன்மை அளிக்காது. ஏதாவது, பழி சொல் வந்து சேரும்.
 13. சண்டை போடுவது போன்று கனவு வந்தால், தங்களது வாழ்க்கை அமைதியானதாகவும், சுற்றியிருக்கும் அனைவரிடமும் சுமூகமான  நட்புறவு கொண்டவராகவும் நீங்கள் திகழ்வீர்கள்.
 14. அரிசி வாங்குவது போன்று கனவு வந்தால், செய்யும் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். மேலும், தன லாபம் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம்.
 15. தேள் கொட்டியது போன்று கனவு வந்தால், வாதத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம்.
 16. பாம்பு கடிக்க வருவது போன்று கனவு வந்தால், எதிர்பார்த்த முடிவுகளில் சாதகமற்ற சூழலால் இழப்பு நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.
 17. கழுதை விரட்டுவது போன்று கனவு வந்தால், மனதில் இருக்கும் பயம் நீங்கி தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.
 18. தொட்டிலில் குழந்தை உறங்குவது போன்று கனவு வந்தால், உங்களது வாழ்க்கை நல்ல நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்ததாக காணப்படும்.
 19. அழகாக சிரித்துக் கொண்டே இருக்கும் குழந்தையை நீங்கள் கனவில் கண்டால் பணவரவு உங்களுக்கு அதிகரித்து செல்வம் பெருகி கொண்டே செல்லும் என்று அர்த்தம்.
 20. அழகான பெண் குழந்தையை நீங்கள் கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையில் எல்லையில்லா சந்தோஷம் ஏற்படப் போகிறது என்று அர்த்தம்.
 21. குழந்தையை கையில் வைத்திருப்பது போன்று கனவு வந்தால், நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிக்காக கொஞ்சம் காலம் காத்திருக்க வேண்டும். வெற்றிப் பாதைக்கு முன்னேறி செல்வது கொஞ்சம் கடினமானதாக இருக்கும்.
 22. குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவது போன்று கனவு வந்தால், பண விஷயங்களில் நெருக்கடி ஏற்படும். மேலும், கையில் இருக்கும் பணமும் வேகமாக செலவாகும் என்பது அர்த்தம்.
 23. குழந்தையை அடிப்பது போன்று கனவு வந்தால், நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு திருப்தியில்லை. அந்த வேலை உங்களுக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தம்.
 24. குண்டாக இருக்கும் குழந்தையை கனவில் கண்டால், உங்களுக்கு நன்மை உண்டாகும் என்பது அர்த்தம்.
 25. பல குழந்தைகள் இருப்பது போன்று கனவு வந்தால் கவலையும், வீண் சண்டைகளும் ஏற்படும்.
 26. குழந்தைகள் எதிர்த்து பேசுவது போன்று கனவு வந்தால், உங்களுக்கு பல சிக்கல்கள் ஏற்படப் போகிறது என்று அர்த்தம். கெட்ட விஷயங்களுக்கு உங்களை ஊக்குவிக்கிறீகள் என்று அர்த்தம்.
 27. குழந்தைகள் விளையாடுவது போன்று கனவு வந்தால், நீங்கள் நிம்மதியில்லாமல் பலவித சிக்கல்களில் சிக்கி தவிக்கிறீர்கள் என்று அர்த்தம்.