இரட்டை குழந்தைகள் பிறக்க என்னென்ன சாப்பிட வேண்டும் தெரியுமா?

409

இரட்டை குழந்தைகள் பிறக்க என்னென்ன சாப்பிட வேண்டும் தெரியுமா?

பொதுவாக குழந்தை பாக்கியம் என்பது இறைவன் கொடுத்த வரம். அதிலேயும், இரட்டை குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், அவர்கள் எத்தனை நாட்கள் தவம் இருக்க வேண்டுமோ? திருமணமாகி 10 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இருப்பார்கள் அல்லவா, அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என்று ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறக்கும். இதெல்லாம், உண்மையில் நடந்த ஒன்று.

இரட்டை குழந்தைகளுக்கு ஜீன்களும் ஒரு காரணமாக அமையும். அதுவும், பாரம்பரிய வழியில் யாருக்கேனும் ஒருவருக்கு அந்த பாக்கியம் அமைந்திருந்தால், இரட்டை குழந்தைகள் சாத்தியம். இது தவிர இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கு ஒரு சில உணவு வகைகளும் மூல காரணமாக திகழ்வதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட்டால் மட்டும் கண்டிப்பாக இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், ஒரு சில உணவுகளை சாப்பிட்டால் இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

கிழங்கு: இரட்டை குழந்தைகள் பெரும்பாலும் நைஜீரியா நாட்டில் அதிகளவில் பிறக்கிறது. ஏனென்றால், அங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் கிழங்கு வகைகளை உணவாக உட்கொள்கின்றனர். கிழங்கில் அதிகளவில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் இருக்கிறது. இது கருப்பையில் அதிகமாக முட்டையை தங்க வைக்க உதவும். அதனால், அதிகளவில் கிழங்கு சாப்பிட்டால் இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது.

போலிக் ஆசிட் உணவுகள்: பீன்ஸ், பீட்ரூட், கீரைகள் ஆகியவற்றில் அளவுக்கு அதிகமான போலிக் ஆசிட் உள்ளது. இந்த போலிக் ஆசிட் உணவுகளை அதிகளவில் சாப்பிடுவதன் மூலமாக 40% வரையில் இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

குறைவான கார்போஹைட்ரேட்: கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கும் உணவுகளான தானியங்கள், பீன்ஸ், காய்கறிகள் மிகவும் சிறந்த உணவுகள். இந்த உணவுகள் கருமுட்டையின் அளவை அதிகரிக்கும் தன்மை கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் நரம்பு குழாயில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இரட்டை குழந்தைகள் அதிகம் பிறக்கும் என்று சொல்லப்படுகிறது.

பால் பொருட்கள்: பால், வெண்ணெய் மற்றும் தயிர் ஆகியவற்றை அதிகளவில் சாப்பிடுவதன் மூலம் இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் உண்டு. இதில், அதிகளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. எலும்புகளுக்கு மட்டுமல்லாமல், இனப்பெருக்க மண்டலத்திற்கும் கால்சியம் சிறந்து விளங்குகிறது. இந்த பால் பொருட்களை உண்ணும் பெண்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றனர் என்று மருத்துவர் கூறியிருக்கின்றனர். இந்த பால் பொருட்கள் இரட்டை குழந்தைகள் பிறக்க வைப்பதோடு, கருவில் இருக்கும் குழந்தைகளின் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.