இறைநிலை என்பது உயர்ந்ததா? தாழ்ந்ததா?

67

இறைநிலை என்பது உயர்ந்ததா? தாழ்ந்ததா?

இறைநிலை என்பது இவையிரண்டுமே இல்லை. உயர்ந்ததாக நினைத்தால் அது எதில் இருந்து உயர்ந்தது? தாழ்ந்ததாக கருதினால் அது எதில் இருந்து தாழ்ந்தது?

எல்லாம் சமநிலை என்ற ஒன்றை பிரதானமாக கொண்டே உயர்ந்தும், தாழ்ந்தும் இருக்கிறது. அப்போது இறை நிலை என்பது சமநிலையே…. இறைவழிபாடு என்ற ஒன்று என்றும் மாற பிரதான நிலையை உணர்வதே..அந்த நிலையில் நிலையின் நிதர்சனத்தை அனுபவிப்பதே…எனவே இறைவாழிபாடு என்ற ஒன்று

நாம் உயர்வாக நினைப்பதை மாயை என்று உணர்வித்து. நாம் தாழ்வாக நினைப்பதையும் மாயை என்று உணர்வித்து. சமநிலை தான் அனைத்தும் என்ற மெய்யை அறிவித்து…அதில் பேதம்? வேறுபாடு? பாகுபாடு? போன்றவை களையச் செய்யும் அற்புதநிலையே… ஆனந்த நிலையே…