இறைவனுக்கு ஆரஞ்சு பழத்தால் அபிஷேகம் செய்தால் என்ன பலன்?

167

இறைவனுக்கு ஆரஞ்சு பழத்தால் அபிஷேகம் செய்தால் என்ன பலன்?

பொதுவாக கோயில்களில் இறைவனுக்கு பூஜை நேரங்களில் அபிஷேகம் செய்யப்படுவது என்பது தொன்றுதொட்டு வரும் வழக்கம். அதிலும், பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், விபூதி, சந்தனம், குங்குமம், தேன், தயிர் என்று ஒவ்வொரு பொருட்கள் கொண்டும் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படும். அப்படி அபிஷேகம் செயப்படும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு.

உதாரணத்திற்கு பால் கொண்டு அபிஷேகம் செய்தால் நீண்ட ஆயுள் உண்டாகும்.

தயிர் கொண்டு அபிஷேகம் செய்தால் புத்திர  விருத்தி உண்டாகும்.

நெய் கொண்டு அபிஷேகம் செய்ய மோட்சம் கிட்டும்.

இளநீர் கொண்டு அபிஷேகம் செய்ய குடும்ப ஒற்றுமை மேம்படும்.

அரிசி மாவினால் அபிஷேகம் செய்ய கடன் தொல்லை நீங்கும்.

கரும்புச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் ஆரோக்கியம் மேம்படும்.

தேன் அபிஷேகம் செய்தால் இனிமையான வாழ்வு அமையும்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், நாம், இந்தப் பதிவில் பார்க்கப் போவது ஆரஞ்சு பழம் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது தான். ஆரஞ்சு பழம் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கேற்ப நோய் இல்லாமல் ஆரோக்கியமான் வாழ்வு அமையும்.

இதே போன்று துன்பங்களிலிருந்து விடுபடவும், சகல சௌபாக்கியங்கள் கிட்டவும் சாத்துக்குடி கொண்டு அபிஷேகம் செய்து வழிபடலாம். கஷடங்களிலிருந்து விடுபட்டு சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழ்வார்கள் என்பது சான்றோர்களின் வாக்கு.