இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?

74

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?

பொதுவாக கோயில்களில் தேங்காய் உடைத்து பூஜை செய்யும் போது தாம்பூழத்தட்டில் வெற்றிலை பாக்கும் வைத்து பூஜை செய்வது வழக்கம். ஆனால், ஏன், வெற்றிலை பாக்கு வைக்கிறோம் என்று பலருக்கும் தெரியாது. அது குறித்து தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

வெற்றிலை பாக்கு மருத்துவ குணம் நிறைந்தது. வெற்றியின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. வெற்றிலை பாக்கை இறைவனுக்கு படைக்கும் போது நாம் செய்யும் பிரார்த்தனையானது முழுமையாக இறைவனை சென்றடையும் என்பது ஐதீகம்.

இதனை தாம்பூலம் என்றும் குறிப்பிடுவர். தாம்பூலத்தின் பின்பக்க இடதுபுறமும், தாம்பூல மத்திய பாகமும் சிவபெருமானை குறிக்கும். தாம்பூலத்தின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், தாம்பூலத்தின் காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக ஐதீகம்.  வெளிப்பக்கம் வெற்றிலையின் மத்திய பாகம் சந்திரனையும் குறிக்கிறது. வெற்றிலை மற்றும் பாக்கு இரண்டுமே மகாலட்சுமியின் அம்சம். சுப நிகழ்ச்சியின் போது வரும் விருந்தினர்களுக்கு வெற்றிலையும், பாக்கும் கொடுத்தால் குடும்பம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

இப்படியிருக்கும் போது இறைவனுக்கு எத்தனை பழங்கள், பதார்த்தங்கள் கொண்டு அர்ச்சனை, நிவேதனம் செய்தாலும் வெற்றிலை பாக்கு மட்டும் வைக்கப்படவில்லை என்றால், அந்த நிவேதனம் முழுமையாக முற்றுப் பெறாது.

கோயில்களில் பூஜையும், ஆண், பெண் ஆகியோருக்கு திருமணமும் மிகவும் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்க்க வெற்றிலை பாக்கு வைத்து படைக்கப்படுகிறது. வெற்றிலையை வாட விடக் கூடாது. அப்படி வாட விட்டால், வீட்டிற்கு நல்லதல்ல என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதனால், தான் வெற்றிலைக்கு அவ்வப்போது தண்ணீர் தெளித்து வைப்பார்கள். இறைவனுக்கு படைக்கப்படும் வெற்றிலை பாக்கை வலது கையால் தான் வாங்க வேண்டும், கொடுக்கவும் வேண்டும்.