இறைவனே கர்மாவுக்கு கட்டுபட்டவன்!

73

இறைவனே கர்மாவுக்கு கட்டுபட்டவன்!

கர்மா பொல்லாதது. கர்மாவை யாராலும் வெல்ல முடியாது. கர்மாவானது உங்களுக்கு எதிராக வினையாற்றுவது இல்லை. உங்கள் செயல்களுக்கு எதிர்வினையாற்றத் தவறுவதும் இல்லை. நீங்கள் செய்த செயல்களுக்கான பலனை ஏதோ ஒரு வடிவில் உங்களிடமே சேர்த்து விடுவது தான் கர்மா. நாம் யாரை அலட்சியம் செய்கிறமோ அங்கே தான் மண்டியிட வேண்டி வரும்.

நாம் யாருக்கு கேடு செய்ய நினைக்கிறோமோ அதே கேடு நமக்கே வந்து சேரும். வாழும் வரையில் நன்மையை மட்டுமே செய்வோம். நல்லவர்களாக வாழ்வோம். மற்றவர்களையும் வாழ வைப்போம். எவ்வளவு கெடுதல் செய்தாலும் அவனது அழிவை அவனே தேடிக் கொள்வான். அவனோடு உங்களை கொஞ்சம் கூட ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்.

பாவமன்னிப்பு என்ற மத சடங்கு இந்து மதத்தில் இல்லாதது ஏன் தெரியுமா?  பாவங்கள் மன்னிக்கப்படுமானால் பாவிகள் தைரியசாலிகள் ஆகிவிடுவார்கள். உணர்ந்தவன் பாக்கியசாமி, கட்டுப்பட்டவன் புத்திசாலி. நீங்கள் பாக்கியசாலியா? புத்திசாலியா? அதனை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். வாழ்வில் மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையை மட்டுமே பின்பற்றுவோம்.

நமது வருமானத்தில் ஓர் மிக சிறிய தொகையினை நமது சமுதாய மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து மகிழ்வோம். யாருக்கேனும் நம்பிக்கை துரோகம் செய்தால் கர்மா அதனுடைய வேலையை தானே மறக்காமல் செய்துவிடும். இறைவனின் அருள், ஆசிர்வாதத்தை விட தர்மத்தின் வாழ்த்து பெரியது. அது நம்மை மட்டுமல்ல, நமது வம்சாவழியையும் நல்வழியில் அழைத்துச் செல்லும்.