இறைவனை வழிபாடு செய்யும் 9 முறைகள்: பார்ட் 6!

57

இறைவனை வழிபாடு செய்யும் 9 முறைகள்: பார்ட் 6!

இறை வழிபாடு என்பது இரு கைகள் கூப்பி இறைவனை வழிபடும் ஒரு முறை தான் என்று நமக்கு தெரியும். மேலும், கோயிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் இருந்தபடியே இறைவனை வணங்குவதையே வழிபாடு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இறைவனை வழிபாடு செய்வதில் 9 முறைகள் இருக்கிறது என்று நம்மில் பலருக்கும் அது குறித்து தெரிவதில்லை.

அதில் எந்த முறை நமக்கு சரிப்பட்டு வருகிறதோ, அந்த முறையில் இறைவனை வழிபட வேண்டும். அப்போது தான் இறைவனை வெகு விரைவில் நாம் சென்றடைய முடியும். அது என்ன என்பது குறித்து இந்த பதிவிலிருந்து ஒவ்வொன்றாக 9 பதிவு வரையில் காண்போம்.

  1. கேட்டல்
  2. பாடுதல்
  3. நினைத்தல்
  4. திருவடிதொழல்
  5. பூஜித்தல்
  6. வணங்குதல்
  7. தொண்டு
  8. சிநேகம்
  9. ஒப்படைத்தல்.

வணங்குதல்:

இறைவனை வழிபடுவதில் அடுத்த கட்டம் தான் இந்த வணங்குதல் முறை. பொதுவாக யாராக இருந்தாலும், கோயிலுக்கு சென்றால் இறைவனை தரிசிக்கிறோம். அப்படியிருக்கும் போது, பூஜித்தல், வணங்குதல், திருவடிதொழல் ஆகிய மூன்று வழிபாட்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று கேட்பார்கள். உண்மையில் இந்த மூன்றுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இங்கு நாம் பார்க்கும் வணங்குதல் என்ற வழிபாட்டு முறையை ‘தலை வணங்குதல்’ என்று பொருள் கொள்ளலாம்.

திருவடிதொழல் மற்றும் பூஜித்தலில் பக்தி முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் வணங்குதலில் அகங்காரத்தை களைவது என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. ‘ நான் என்ற ஆணவம்தான் அனைத்துக்கும் மூல காரணம். அந்த நான் என்ற அகந்தையை ஒழித்து, எல்லாம் நீ என்ற பணிவுடன் இறைவனை தலைவணங்கும் முறை தான் இது. நான் என்னும் அகங்காரத்தை கைவிட்டால் ஒழிய, இறைவனின் அருள் நமக்கு கிடைக்க வழியே இல்லை என்பதைச் சொல்வதே இந்த வழிபாட்டின் சிறப்பம்சம்.