இறைவனை வழிபாடு செய்யும் 9 முறைகள்: பார்ட் 8!

47

இறைவனை வழிபாடு செய்யும் 9 முறைகள்: பார்ட் 8!

இறை வழிபாடு என்பது இரு கைகள் கூப்பி இறைவனை வழிபடும் ஒரு முறை தான் என்று நமக்கு தெரியும். மேலும், கோயிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் இருந்தபடியே இறைவனை வணங்குவதையே வழிபாடு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இறைவனை வழிபாடு செய்வதில் 9 முறைகள் இருக்கிறது என்று நம்மில் பலருக்கும் அது குறித்து தெரிவதில்லை.

அதில் எந்த முறை நமக்கு சரிப்பட்டு வருகிறதோ, அந்த முறையில் இறைவனை வழிபட வேண்டும். அப்போது தான் இறைவனை வெகு விரைவில் நாம் சென்றடைய முடியும். அது என்ன என்பது குறித்து இந்த பதிவிலிருந்து ஒவ்வொன்றாக 9 பதிவு வரையில் காண்போம்.

  1. கேட்டல்
  2. பாடுதல்
  3. நினைத்தல்
  4. திருவடிதொழல்
  5. பூஜித்தல்
  6. வணங்குதல்
  7. தொண்டு
  8. சிநேகம்
  9. ஒப்படைத்தல்.

சிநேகம்:

இறைவனை அன்பாகவும், சிநேகத்துடனும் பார்க்க முடிவது ஆன்மீகத்தின் தனிச் சிறப்பு. அன்பும், காதலும் நிறைந்தது தான் இறைவன் வழிபாடு. மீரா ராதை போன்றவர்கள் இந்த அன்பின் எல்லையால் இறைவனை கட்டிப்போட்டவர்கள். இறைவன் என்னும் மலையை எப்படி அன்பு என்னும் பிடியில் கட்டுவது? அது கற்பனை என்று தோன்றலாம். ஆனால் அது சாத்தியம் என்கிறது இந்த வழிபாட்டு முறை.