இறைவன் என்பவா் யாா்?

108

இறைவன் என்பவா் யாா்?

இறை என்றால் உணவையும் ஞானத்தையும் குறிக்கும் சொல்.

உடல் பசிக்கு தேடி கிடைத்தால் அது உணவு. இது உடலுக்கு தற்காலிக ஆற்றலை கொடுக்கும் .

அறிவு அதாவது மெஞ்ஞான பசி தேடலால் கிடைப்பது இறைவன் என்ற இறை. இது நிறந்தர ஆற்றலை வழங்கக்கூடியது. அந்த இறைவன் பஞ்ச பூதங்கலால் இயங்கக்கூடிய அனைத்திலும் இயங்குகிறான். அவனுக்கு பல பெயா்களையும் பல உருவங்களையும் கொடுத்துள்ளார்கள்.

யாா் கடவுள்?

இப்படி ஞான பசியின் தேடலின் விளைவாக எங்கும் அலைந்து திாிந்து நன்மை தீமைகளை கடந்து இன்ப துன்பங்களை அனுபவித்து பொன் பொருட்களில் புரண்டும் புற இன்பத்தில் திளைத்து இறுதில் இவைகளில் கிடைக்காத இன்பமாக அக இன்பத்தை தேடி அலைந்து மனம் அடங்கி இறுதியில் நான் யாா் என்ற கேள்வி எழும்பி அதை தேடி நம் உள்ளே கடந்து சென்று ஞானம் அடைந்து பின் எங்கும் வியாபித்திருக்கும் அந்த இறைவனின் மொத்த உருவமே நாம் தான் என்று உணா்ந்து கடவுள் தன்மையை அடைந்து கடவுளாகவே மாறுவிடுவது.

ஆகவே ஞான நிலை அடையாத வரை வெளியில் இறைவனை தேடியும் ஞான நிலையை அடைந்த பிறகு தன் உள்ளே இறைவனை தேடியும் கடவுளாக மாறுவதே இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்று சித்தா்கள் கூறியுள்ளாா்கள்.