உமாதேவி, ஆண்டாள் அவதரித்த நாள் ஆடிப்பூரம்!

57

உமாதேவி, ஆண்டாள் அவதரித்த நாள் ஆடிப்பூரம்!

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெறும். ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு உகந்த மாதம். அந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அந்த வகையில் நாளை ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆடி 26 ஆம் தேதி ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பூரம்:

ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது தான் ஆடிப்பூரம். இது தேவிக்குரிய நாள். அம்மன் பிறந்தநாள் என்றும், உமா தேவி அவதரித்த நாள் என்றும் புராணங்களில் சொல்லப்படுகிறது. மக்களை பாதுகாப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த நாள் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது.

ஆண்டாள் அவதரித்த நாள்:

ஆண்டாள் அவதரித்த தினம் கூட பூரம் நட்சத்திரம் ஆகும். பூமாதேவியே ஆடிப்பூரம் நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த ஆடிப்பூரம் நாளில் தான் முனிவர்களும், சித்தர்களும் இறைவனை நினைத்து தவம் புரிவார்கள் என்று சொல்லப்படுகிறது.

சைவ சமயங்களில் மட்டுமல்லாமல், வைணவத்திலும் ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஆடிப்பூரம் தினத்தன்று ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். திருமண வரன் தேடிக் கொண்டிருக்கும் பெண்கள் இந்த நாளில் ஆண்டாளை வழிபட்டு வர விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை.