எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? எத்தனை நாட்கள் ஏற்ற வேண்டும்?

155

எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? எத்தனை நாட்கள் ஏற்ற வேண்டும்?

கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேரும் நாள் தான் திருக்கார்த்திகை. இந்த நாளைத் தான் நாம் கார்த்திகை தீபமாக கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் மக்கள் தங்களது வீடுகளிலும், கோயில்களிலும் தீபங்கள் ஏற்றி வந்து கொண்டாடுகின்றனர்.

16 வகையான தீபங்கள் என்னென்ன தெரியுமா?

அந்த வகையில் இந்த 2021ஆம் ஆண்டு திருக்கார்த்திகை திருநாள் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் எத்தனை தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும். அதுவும் எங்கெங்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் பார்ப்போம்.

 1. வீட்டு முற்றத்தில் 4 விளக்குகள் ஏற்ற வேண்டும்.
 2. சமையலறையில் ஒரு விளக்கு ஏற்றிட வேண்டும்.
 3. நடையில் 2 விளக்குகள் ஏற்ற வேண்டும்.
 4. வீட்டின் பின்புறம் 4 விளக்குகள் ஏற்றிட வேண்டும்.
 5. திண்ணை இருந்தால் அதில் 4 விளக்குகள் ஏற்ற வேண்டும்.
 6. மாட குழியில் 2 விளக்கு ஏற்ற வேண்டும்.
 7. நிலைப்படிக்கு 2 விளக்கு ஏற்றிட வேண்டும்.
 8. சாமிபடத்துக்கு கீழே 2 விளக்கு ஏற்ற வேண்டும்.
 9. வெளியே யம தீபம் ஒன்று ஏற்ற வேண்டும்.
 10. திருக்கோலம் போட்ட இடத்தில் 5 என்று மொத்தம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும்.
 11. இந்த 27 என்பது 27 நட்சத்திரங்களைக் குறிக்கிறது.

தீபங்கள் எத்தனை நாட்கள் ஏற்ற வேண்டும்?

முதல் நாள் பரணி தீபம், 2ஆவது நாள் கார்த்திகை தீபம், 3ஆவது நாள் என்று 3 நாட்களும் வீட்டில் விளக்கேற்ற வேண்டும்.

சாமிக்கு காட்டப்படும் தீபங்கள் என்னென்ன தெரியுமா?

விளக்கேற்றும் நேரம்:

கார்த்திகை மகா தீப நேரம் மாலை 6 மணி என்பதால், அந்த நேரத்தில் தீபம் ஏற்றுவது நல்லது.

தீபமானது அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு மற்றும் கிளியன் சட்டி என்று தீபங்கள் பல வடிவங்களில் ஏற்றி வைக்கப்படுகிறது.

பூஜை மணியில் நந்தி சிலை இருப்பதற்கு என்ன காரணம்?

கிளியன் சட்டி தீபம்:

கிளியன் சட்டி எனப்படும் களிமண்ணால் செய்யப்பட்ட விளக்கில் நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்ற வேண்டும். பசு நெய்யில் அம்பிகை வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. அந்த பசு நெய்யை தீபத்தில் வைத்து ஏற்றும் போது அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

செய்வினை கோளாறு நீக்கும் மஞ்சள் துணி திரி!

வாழை இலை வழிபாடு:

ஒவ்வொரு தீபமும் ஏற்றி வழிபடும் போது அதற்கு கீழாக வாழை இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். அந்த வாழை இலை மீது தான் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். வாழை இலை இல்லையென்றால் பசு சாணம் கூட வைக்கலாம்.

https://swasthiktv.com/arthamulla-aanmeegam/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8f/