எப்பொழுது தெய்வம் நமக்கு துணை நிற்கும்?

65

எப்பொழுது தெய்வம் நமக்கு துணை நிற்கும்?

காகத்தை போல என்றும் ஒற்றுமையாக இரு சனீஸ்வரன் அருகில் வரமாட்டார். நாய் போல நன்றி விசுவாசத்துடன் இரு பைரவர் உனக்கு செல்வத்தை அள்ளித் தருவார். ஆந்தையை போல தீமையிடம் பாதுகாப்பாக விழித்திரு லட்சுமி வீட்டில் வாசம் செய்வாள்.

சிங்கத்தை போல வீரமாக தைரியத்துடன் இரு பார்வதி உன் வீட்டில் வாசம் செய்வாள். அன்னப்பறவை நீரையும், பாலையும் பிரிப்பதை போல அறிவுள்ள நல்ல மனிதர்களுடன் நட்புக் கொள் சரஸ்வதி உன் வீட்டில் வாசம் செய்வாள். எலி போல தொழிலில் ஊழல் செய்யாமலிரு வினைகளை அழிக்கும் விநாயகர் உன் வீடு தேடி வருவார்.

மயிலை போல மகிழ்ச்சியில் எப்பொழுதும் தோகை விரித்தாடு  அழகன் முருகன் உன் வீட்டினில் அவதாரிப்பான். உன் மனம் உலக பிரச்னைகளை கடந்து வானத்தில் கருடனை போல பறக்கட்டும் அப்பொழுது கண்ணன் வருவான் அகத்திற்கு.

தீமை எல்லாவற்றிக்கும் அஞ்சாத காளையாய் எதிர்த்து நில், உலகை படைத்த ஜோதியான தந்தை ஈசனே வருவார் உன் வாழ்வினில் என்றும் துணை நிற்பதற்கு.

சிவாய நம….

ஓம் நம சிவாய….