கடிகாரத்தை எங்கு வைக்க வேண்டும் தெரியுமா?

174

கடிகாரத்தை எங்கு வைக்க வேண்டும் தெரியுமா?

என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும் வீடுகளில், அலுவலகத்தில், நம்மை சுற்றியுள்ள இடங்களில் இன்னும் வாஸ்து சாஸ்திரம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அதன்படியே நம்மைச் சுற்றியுள்ள இடங்களை அமைத்து வருகிறோம். வாஸ்து சாஸ்திரம் என்றழைக்கப்படும் கட்டிடங்களுக்கான கட்டமைப்பு விதி, 1000 ஆண்டுகளுக்கு முன்னதாக சிவன் கோயில்கள் கட்டமைப்பதற்காக ஆகம் விதி என்று சிவனடியார்களால் வரையறுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

சிவன் கோயில்களில் எந்தப் பொருளை எங்கு, எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும் என்பதை ஆகம விதியானது தெளிவாக வரையறுத்துள்ளது. அதன்படி, நம் வீடுகளில் உள்ள சில குறிப்பிட்ட அதுவும் பொதுவான பொருட்களை எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும், எங்கு, எப்படி வைக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்…

ஒவ்வொருவரது வீடுகளிலும் கடிகாரம் இருக்கும். அது சுவரில் தொங்கவிடுவது போன்றும், டேபிள் மீது வைப்பது போன்றும், ஷோகேஷில் இருப்பது போன்றும் என்று பல இடங்களில் கடிகாரத்தை வைத்திருப்பது வழக்கம். ஆனால், கடிகாரத்தை சரியான திசையில் வைத்தால் தான் தேவையான நேர்மறையான ஆற்றல் வீட்டில் இருக்கும். ஒருவேளை தவறான திசையில் வைத்துவிட்டோமானால், எதிர்மறை விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.

பொதுவாக, கடிகாரத்தை கதவுகளுக்கு மேல் தொங்கவிடக் கூடாது. அதே போன்று தெற்குப் பகுதியிலுள்ள சுவரிலும் மாட்டக் கூடாது. ஏனென்றால், தெற்குப் பகுதியானது எமதர்மராஜாவுக்கு உரியது. கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் தொங்கவிடுவது நல்லது.

கடிகாரத்தைப் போன்று கண்ணாடியை வைப்பதற்கும் வாஸ்து உண்டு. அதன்படி, கண்ணாடியை வடக்கு கிழக்கு திசையில் வைப்பது நல்லது. சதுரம் அல்லது செவ்வக வடிவில் தான் கண்ணாடி இருக்க வேண்டும். அதோடு, தரையிலிருந்து 4 அடிக்கு மேல் தான் கண்ணாடி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, செல்வ வளம் பெருக மணி பிளாண்ட் செடியை வீட்டில் வளர்க்க வேண்டும். அந்த செடியானது வடக்கு கிழக்கு திசையை நோக்கி இருக்கமாறு வைத்து வளர்க்க வேண்டும்.