கந்த சஷ்டி கவசம் பகுதி 2!

118

கந்த சஷ்டி கவசம் பகுதி 2!

எம்பெருமானை வணங்கி அவரிடம் 108 யுகங் கள் உயிர் வாழவும், 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் என்னும் தேரையும் வரமாக பெற்று, தான் என்றும் அழியாமல் உயிருடன் வாழ சாகாவரம் அளிக்க வேண்டும் என்றும் வேண்டி நின்றான்.

சிவபெருமான் சூரபத்ம னை நோக்கி “உலகில் தோன்றிய உயிர்களு க்கு பிறப்பு என்பது எவ்விதம் இருக்கின்றதோ அவ்விதம் இறப்பு என்பது உண்டு. அதை யாராலும் மாற்ற இய லாது. இயற்கையை எவராலும் மீறி செயல்பட இயலாது என்று கூறி இவ்வரத்தினை தவிர்த்து வேறு வரத்தை கேட்பாயாக…” என்று கூறினார்.

பின்பு சிறிது நேரம் சிந்தித்த சூரபத்மன் தனது அழிவு என்பது தங்களின் சக்தியா ல் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், தங்களால் இருக்கக்கூடாது என்றும், என் னை அழிக்க கூடியவர் எந்த பெண்ணின் வயிற்றில் இருந் தும் பிறந்து இருக்கக் கூடாது என்றும் அவனா ல் மட்டுமே எனக்கு அழிவு நேரிட வேண்டும் என்ற வரத்தினை அளிக்க வேண்டும் என்று வேண்டினான் சூரபத்மன்.

Also Read This: கந்த சஷ்டி ஆரம்பம்: கந்த சஷ்டி கொண்டாடுவது ஏன்?

எம்பெருமான் சூரபத்மன் வேண்டிய வரத் தை யும், இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக அளித்தார். பின்பு, அவ்விடம் விட்டு மறைந்து கைலாயம் சென்றார்.

சிவபெருமான் மறைந்ததும் எந்த குழந்தை யும் பெண்ணின் உதவியின்றி பிறந்திட இயலாது என்றும், தான் என்றும் அழிவில்லா தவன் தன்னை அழிக்க எவ ராலும் இயலாது என்றும் ஆணவத்துடன் தான் பெற்ற வரத்தின் மகிழ்ச்சியை, தன் சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ள அவர்கள் இருக்கும் இடத்தினை நோக்கி பயணிக்க தொடங்கினார்.

அசுரலோகம் சென்று சுக்கிராச்சாரியாரை வணங்கி தான் பெற்ற வரத்தினை பற்றி எடுத்துரைத்து அவரிடம் ஆசிப்பெற்றான். பின் சூரபத்மன் பதுமகோமளை எனும் பெண்ணை மணந்து வீரமகேந்திரபுரியை ஆட்சி செய்து வந்தான்.

பின்பு அண்டசராசரங்கள் எல்லாவற்றை யும் தனது குடையின் கீழ் கொண்டு வந்து ம், தனது சகோதரர்கள் மற்றும் தன்னை போன்ற பல அசுரர்களை கொண்டும் ஆட்சி புரிந்து வந்தான்.

சொர்க்கலோகம் சென்று இந்திரன் இல்லா மையால் இந்திரன் மகனான சயந்தன் முதலா ன சொர்க்கலோகத்தை சேர்ந்த தேவர்களை கைது செய்து சிறை யில் அடைத்து அவர்களுக்கு எண்ணிலட ங்கா பல துன்பங்களை அளித்து வந்தான்

அவர்கள் அடையும் துன்பத்தை கண்டு அசுரர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடை ந்து கொண்டிருந்தனர். ஆனால், இந்திர னோ சூரபத்மனின் வருகையை உணர் ந்து இந்திர லோகம் விடுத்து பூலோகத்தி ல்  மறைந்து கொண்டார்.

அசுரர்களின் அதர்ம செயலானது சொர்க் கலோகம் மட்டுமின்றி பூலோகத்தில் இரு ந்த அனைத்து ஜீவராசிகளையும் பாதித் தது. ஜீவ ராசிகளுக்கு இவர்கள் இழைத்த தீமைகளை கண்ட தேவர்கள் அனைவரும், இந்திரனுடன் கைலாயம் சென்று சிவபெ ருமானிடம் தாங்கள் அடைந்து வரும் துன்பங்களில் இருந்து தங்களைக் காக்க வேண்டும் என்றும் பணிந்து நின்றனர்.

தேவர்கள் அடைந்து வந்த இன்னல்களை அறிந்த சிவபெருமான் அவர்களுக்கு உதவும் பொருட்டு சூரபத்மனை வதம் செய்யக்கூடிய வன் விரைவில் வருவான் என்று கூறினார்.

சிவ பெருமான் சூரபத்மனுக்கு அளித்த வரத் தின் அடிப்படையிலேயே அவனை அளிக்கக் கூடிய ஒருவரை உருவாக்கத் தொடங்கினார். அதாவது பார்வதிதேவி கருவுற்று ஈன்று எடுக்காமல் அந்த சக்தியினை உருவாக்க தொடங்கினார்.

தனது ஒற்றர்களின் மூலம் தேவர்கள் மற்றும் அவர்களின் வேந்தனான இந்திர தேவன் உட்பட அனைவரும் சிவபெருமா னை காண கைலாயம்சென்றதை அறிந்து கொண்ட சூரபத்மன் தனது சகோதரன் ஆன தாரகாசுரனை அனுப்பி அவர்களை சிறை பிடிக்குமாறு உத்தரவிட்டான்.

தேவர்களின் இன்னல்களை போக்க பார் வதி தேவியும், எம்பெருமானும் கைலாயத் தில் இருந்த குகைக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆனந்த தாண்டவத்தில் இருந்த னர்.

பின்பு தாண்டவத்தின் மகிழ்ச்சி நிலையி ல் எம்பெரு மானுடைய சக்தியின் ஒரு பகுதியும், பார்வதி தேவியினுடைய சக்தி யின் ஒரு பகுதியும் இணைந்து பார்வதி தேவி கருவுறாமல் ஒரு புதிய சக்தியின் தோற்றத்திற்கு அடிப்படையா க இருந்தன.

அப்போது அக்னி தேவர் எம்பெருமானை காண அவர் வீற்றிருக்கும் இடத்தை அடைந் தார். இருப்பினும் சிவபெருமான் இருக்கும் இடத்தில் அவர் இல்லாததை கண்டு மனம் கலங்கி நின்றார்.

பின், கைலாயத்தில் இருந்த குகையில் வந்த வெளிச்சம் நேரம் ஆக ஆக அதிகரித் துக்கொண்டே இருந்தது. ன்அந்த வெளிச் சத்தின் பிரகாசத்துடன் சிறிது வெப்பமும் உண்டாயிற்று. அக்னி தேவர் அந்த குகையின் உள்ளே சென்று பார்த்தார்.

அந்த வேளையில் எம்பெருமானும் பார்வ திதேவியும் தியான நிலையில் ஆனந்த தாண்டவம் புரிய அங்கு ஒரு மகத்தான சக்தி உருவானதை கண்டார்.

தேவர்களை சிறைப்பிடிக்க வந்து கொண் டிருந்த தாரகாசுரன் இச்செய்தியை அறிந் தவுடன் கைலாயத்தை நோக்கி தனது படையுடன் சென்றான். கைலாயத்தை அடைந் ததும் அங்கிருந்த பூத கணங்களு க்கும், தாரகா சுரனின் படைகளுக்கும் இடையே போர் உண்டாயிற்று.

அக்னி தேவர் சிவபெருமானை காண சென்று வெகு நேரம் ஆயிற்றே என எண்ணி தேவர்க ளும் கைலாயத்திற்கு சென்றார்கள். அந்த வேளையில் நந்தி தேவரும் அவருடன் இருந்த மற்ற பூத கணங்களும் அசுரர்களுடன் சண்டை யிட்டு கொண்டிருப்பதை கண்ட தேவர்கள் போரில் ஈடுபட்டனர்.

எம்பெருமானும்.பார்வதிதேவியும் தியான நிலையில் தாண்டவம் புரிந்து கொண்டே அமர்ந்திருக்க, அவர்கள் இருவரிடமிருந்து உருவான புதிய சக்திக்கு மேலும், ஆற்ற லை அளித்து கொண்டு இருந்தார்கள்.

அந்த சக்தியானது அதிகரிக்க அதிகரிக்க அதனுடன் வெளிச்சமும், வெப்பமும் அதிகரி த்துக்கொண்டே இருந்தது. அக்னி தேவர் அந்த குகையில் நுழைந்த போது சிவபெருமானுக்கு ம் பார்வதிதேவிக்கும் மற்றும் அங்கு உருவான சக்திக்கும் உள்ள தொடர்பு குறைந்து கொண்டே இருந்தது.

ஒரு நிலையில் பார்வதி தேவியின் தொடர்பு முழுவதுமாக இன்றி அச்சக்தியானது சிவபெருமானுடன் மட்டும் தொடர்பு கொண்டு இருந்தது. இறுதியாக சிவபெருமா ன் தேவர்களை காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி தனது நெற்றிக் கண்களை திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம் அகோரம் வாமதேவம், சத்யோ ஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக் கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் அச்சக்தியுடன் இணைத்து மேலும் அச்சக்திக்கு அதிக வலிமையையும் அளித்தார்

கைலாயத்தில் அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் யுத்தம் நடைபெற்ற பொழுது, அசுரர்களின் வேந்தன் தன்னந்தனியாக கைலாய மலையின் மேற்பகுதிக்கு செல்வதை தேவேந்திரன் கண்டார். இருப்பினும் தன்னால் தாரகாசுரனை தடுக்க இயலாது என்பதை உணர்ந்த தேவேந்திரன் அக்னி தேவர் இருக்கும் இடத்தை அடைந்தார்.

பின்பு அக்னி தேவரிடம் தாரகாசுரன் இவ்விடம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றான். அவனிடம் இந்த சக்தியானது கிடைத்தால் அவன் அதை அழித்து விடுவான். ஆகவே நீர் இச்சக்தியை எடுத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்தை நோக்கி செல் என்று கூறினார்.

பின்னர் தேவேந்திரனின் கூற்றுக் கிணங்கி அக்னி தேவர் அந்த சக்தியை கைலாய மலையில் இருந்து எடுத்துக்கொண்டு புறா வடிவில் பறந்து சென்றார்.

அவ்வேளையில் தாரகாசுரன் வரவே தேவேந்திரனும் அந்த இடத்தை விட்டு மறைந்து சென்றார். பின், தாரகாசுரன் தியான நிலையில் இருந்த எம்பெருமானையும், பார்வதிதேவியையும் கண்டான். அங்கு எவ்விதமான சக்தி தோற்றமும் புலப்படவில்லை. பின்பு இது தேவர்களின் ஒரு வகையான சதிச்செயலாக இருக்கலாம் என எண்ணி போர் நடக்கும் இடத்திற்கு தாரகாசுரன் சென்றான்.

போர் புரியும் இடத்தில் இருந்த தேவர்கள் இல்லாமல் அனைவரும் பூத கணங்களாக இருந்தனர். பின்பு அசுரர்கள் அனைவரும் அவ்விடத்தை விட்டு அசுரலோகம் சென்றனர்.

இருப்பினும் தாரகாசுரன் இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது போல் உணர்ந்தான். நேரம் அதிகரிக்க அதிகரிக்க அந்த சக்தியிடமிருந்து வெளிப்பட்ட வெப்பத்தின் அளவை அக்னி தேவரால் தாங்க முடியாததால் அந்த சக்தியை கங்கை நதியில் போட்டுவிட்டார்.